280 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
00:46

காஞ்சிபுரம் : அரசு நிலம், 280 ஏக்கர், ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருப்பதாக, புள்ளலுார் கிராமத்தினர், மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.




காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர், பொன்னையா தலைமையில், நேற்று காலை நடந்தது. இதில் பங்கேற்ற புள்ளலுார் கிராமத்தினர், தங்கள் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள, 280 ஏக்கர் அரசு நிலத்தை மீட்க கோரி, கலெக்டரிடம் மனு அளித்தனர். அதன் விபரம்:காஞ்சிபுரம் தாலுகா, புள்ளலுார் ஊராட்சியில் உள்ள ஏரி கால்வாய், நீர்நிலை புறம்போக்கு இடம் என, 200 ஏக்கருக்கு மேல், படுநெல்லி, புள்ளலுார், மூலப்பட்டு, ரங்கநாதபுரம் கிராம மக்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.




மேலும், மேய்க்கால் புறம்போக்கு நிலம், 80 ஏக்கர், தண்டலம், பள்ளம்பாக்கம், புள்ளலுார் கிராம மக்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்களில், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் செய்ய முயற்சித்தால், ஆக்கிரமிப்பாளர்கள் தடுக்கின்றனர்.இரவில், அப்பகுதியில், டிராக்டர், லாரிகள் மூலம் மணல் கடத்தல் நடக்கிறது. எனவே, ஆக்கிரமிப்பு பகுதியை, வருவாய் துறை மீட்டு, வேலி அமைத்து, ஊராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.




அதேபோல், கல்குவாரிக்கு அனுமதி வழங்க கூடாது எனக்கூறி, முருகம்பாக்கம் கிராம மக்கள் அளித்த மனு விபரம்:மதுராந்தகம் தாலுகா, முருகம்பாக்கம் கிராமத்தில், கல்குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகத்திடம், தனி நபர் விண்ணப்பம் செய்துள்ளார்.எங்கள் கிராமம், விவசாய நிலம் நிறைந்தது; விவசாய கூலி தொழிலை நம்பியுள்ளோம். ஏற்கனவே, எங்கள் கிராமத்தில் கல்குவாரி ஒன்று அமைத்து, விவசாய நிலங்கள் அனைத்தும் மாசடைந்தது.




எனவே, கல்குவாரிக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு, கல்குவாரி அனுமதி வழங்க வேண்டாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.15 ஸ்கூட்டர் வழங்கல் குறைதீர் கூட்டத்தில் பட்டா, குடும்ப அட்டை, உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய, 310 பேர் மனு அளித்தனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற கலெக்டர், பொன்னையா, சம்பந்தப்பட்ட துறையிடம் வழங்கி, நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.




தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில், 15 மாற்றுத் திறனாளிகளுக்கு, 7.95 லட்சம் ரூபாயில், இலவச ஸ்கூட்டர்ககளை கலெக்டர் வழங்கினார். தேசிய அளவில், விளையாட்டு போட்டிகளில், தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற வீரர், வீராங்கனையருக்கு, 2.88 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஊக்கத்தொகையை கலெக்டர் வழங்கினார்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
20-ஆக-201910:51:47 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj காஞ்சிபுரம் நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட நிர்வாகம் முன்வரவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
20-ஆக-201910:49:51 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj காஞ்சிபுரம் நகரிலும் பொது இடங்கள் சாலைகள் வீதிகள் வாய்க்கால் புறம்போக்குகள் நீர் நிலை ஆதாரங்கள் அஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளதை மாவடட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை வழி அகற்றிடல் வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X