புதிய லீன் குழுமங்களுக்கு அனுமதி நிறுத்தம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

20 ஆக
2019
02:18
பதிவு செய்த நாள்
ஆக 20,2019 00:57

திருப்பூர்:ஓராண்டாக, புதிய லீன் குழுமங்களுக்கு அனுமதி வழங்காமல் நிறுத்திவைத்துள்ளதால், திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்கள், உற்பத்தி செலவை குறைக்கும் பயிற்சி பெறமுடியாமல் தவிக்கின்றன.உள்நாடு, உலகளாவிய ஆடை வர்த்தக சந்தைகளில், நாளுக்குநாள் போட்டி அதிகரித்துவருகிறது.


அதனால், திருப்பூரில் உள்ள, உள்நாடு மற்றும் ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு கிடைக்கும் லாப விகிதம் குறைந்துகொண்டே இருக்கிறது.நிதி நெருக்கடி, வர்த்தக போட்டிகளை எதிர்கொள்ள முடியாமல், சிறு, குறு நிறுவனங்கள் தவிக்கின்றன.செலவினங்களை கட்டுப்படுத்தி, உற்பத்தியை பெருக்கும் யுத்திகளை கடைபிடிக்கத் துவங்கியுள்ளன, பின்னலாடை நிறுவனங்கள்.


இதற்கு, மத்திய சிறு குறு நிறுவனங்களின், லீன் பயிற்சி திட்டம் கைகொடுத்துவருகிறது.திருப்பூர் தொழில் பாதுகாப்புக்குழு, சிறு, குறு, நடுத்தர ஆடை உற்பத்தி நிறுவனங்களை ஒருங்கிணைத்து, லீன் குழுமங்களை உருவாக்கிவருகிறது. லீன் குழும நிறுவனங்களுக்கு, 80 சதவீதம் அரசு மானியத்துடன், சிறந்த வல்லுனர்களைக்கொண்டு, 18 மாதங்கள், உற்பத்தி செலவை கட்டுப்படுத்துவது; மெஷின்கள், தொழிலாளர் திறன்களை முழுமையாக பயன்படுத்துவது; மூலப்பொருட்கள் வீணாவதை கட்டுப்படுத்துவது உட்பட பல்வேறு யுத்திகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.


இதுவரை, 13 லீன் குழுமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன; 222 ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இதில் அங்கம்வகிக்கின்றன. ஒன்பது குழுமங்களுக்கு உட்பட்ட 86 நிறுவனங்கள், பயிற்சி முடித்துள்ளன.


இந்நிலையில், சிறு, குறு நிறுவனங்கள் துறை, புதிய லீன் பயிற்சி திட்டங்களுக்கு அனுமதி வழங்காமல், நிறுத்தி வைத்துள்ளது. திருப்பூர் பகுதி ஆடை உற்பத்தி நிறுவனங்கள், மானியத்துடன் கூடிய, லீன் பயிற்சிக்குள் நுழைய முடியாமல் தவிக்கின்றன.


தொழில்பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை கூறியதாவது:இன்றைய வர்த்தக போட்டியை எதிர்கொள்வதற்கு, ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, லீன் பயிற்சி மிக அத்தியாவசியமானதாக உள்ளது. பிற நாடுகளுடனான வர்த்தக போட்டிகளை எதிர்கொள்ளும்வகையில், திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களை ஒருங்கிணைத்து, லீன் குழுமங்கள் உருவாக்கப்படுகிறது.இப்பயிற்சி முடித்த நிறுவனங்களின் செலவினங்கள் குறைந்து, ஆண்டு லாப விகிதம் உயர்ந்துள்ளது; போட்டியிடும் திறனும் அதிகரித்துள்ளது.


எனவே, ஏராளமான லீன் குழுமங்களை உருவாக்கி, ஒட்டுமொத்த ஆடை உற்பத்தி துறையின் பலத்தை அதிகரிக்கச் செய்வதில், தொழில்பாதுகாப்புக்குழு முனைப்புகாட்டி வருகிறது.ஆனால், கடந்த ஓராண்டாக, புதிய லீன் குழுமங்கள் துவங்குவதற்கான அனுமதி வழங்காமல், நிறுத்திவைத்துள்ளனர், டில்லியில் உள்ள இந்திய தர நிர்ணய கவுன்சில் அதிகரிகளிடம் கேட்டபோது, லீன் திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகவும், மீண்டும் செயல்பாட்டுக்கு வருவதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் தெரிவிக்கின்றனர்.


மிகவும் பயனுள்ள இத்தகைய திட்டங்களை திடீரென நிறுத்திவைப்பது, மிகவும் கவலை அளிக்கிறது.சிறு, குறு, நடுத்தர ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு ஸ்திரத்தன்மை அளிக்கும் லீன் பயிற்சி திட்டத்தை மத்திய அரசு உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். புதிய குழுமங்கள் உருவாக்க அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X