திட்டக்குடி பகுதியில் தொடர் திருட்டு குற்றவாளிகளை பிடிக்க போலீசார் திணறல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
01:41

திட்டக்குடி: திட்டக்குடி மற்றும் ராமநத்தம் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்திருட்டு நடைபெறுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.திட்டக்குடி காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட திட்டக்குடி, ஆவினங்குடி, ராமநத்தம் காவல்நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட கிராமங்களில் கடந்த இரண்டு மாதங்களில் நடந்த தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். கடந்த ஜூன் 30ம் தேதி இடைச்செருவாய் அய்யனார்கோவில், மாரியம்மன் கோவில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது. மேலும் கோவிலில் இருந்த பித்தளை சாமான்கள் திருடு போனது. ஜூலை 19ம் தேதி ஆலத்துார் அரசு தொடக்கப்பள்ளியின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இரண்டு கம்ப்யூட்டர் மானிட்டர்கள், லேப்டாப், டிவிடி பிளேயர் திருடுபோனது. 26ம் தேதி திட்டக்குடி அரசு தொடக்கப்பள்ளி அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளிருந்த ஒரு கம்ப்யூட்டர் மானிட்டர் திருடு போனது. 27ம் தேதி கீழக்கல்பூண்டியில் சங்கர் என்பவர் நகைக்கடை பூட்டை உடைத்து உள்ளிருந்த லாக்கரை துாக்கிச்சென்ற மர்ம நபர்கள் அதிலிருந்து 25லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்களை திருடிச்சென்றனர். 28ம் தேதி ராமநத்தம் மற்றும் கீழக்கல்பூண்டி டாஸ்மாக் கடைகளில் திருட்டு முயற்சி நடந்தது. 29ம் தேதி தச்சூர் நல்லதங்காள் கோவில், 30ம் தேதி கண்டமத்தான் சன்னாசியப்பர் கோவில் உண்டியல் திருட்டு, 31ம் தேதி கண்டமத்தான் கிராமத்தைச்சேர்ந்த தங்கப்பன் என்பவருக்குச் சொந்தமான 50ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரப்பர் டியூப்கள் திருடுபோனது. ஆவினங்குடி அருகே கூடலுார்குடிகாடு கிராமத்தில் மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்திலிருந்த தாலி, உண்டியல் பணம் திருடுபோனது. ஆகஸ்டு 6ம் தேதி கீழநெம்மேலி கிராமத்திலுள்ள திரவுபதையம்மன் கோவிலில் இருந்த ரேடியோசெட் திருடுபோனது. 7ம் தேதி மேலாதனுார் கிராமத்தில் அஞ்சலம் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து ஒருசவரன் தங்கம், வெள்ளி கொலுசு, 5ஆயிரம் ரூபாய் ரொக்கம், துரைசித்தன் என்பவரது வீட்டிலிருந்து 6ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். மேலும், மூன்று பேரின் வீடுகளில் திருட முயற்சி செய்தனர். எழுத்துார் அண்ணாமலை ஈஸ்வரர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்றனர். மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் மண்டல துணைதாசில்தார் ஜெயச்சந்திரன் அறையில் வைத்திருந்த லேப்டாப் மாயமானது. சிலநாட்கள் கழித்து தாலுகா அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த தலைமையிடத்து துணைதாசில்தார் ராமரின் பைக் மாயமானது. தாலுகா அலுவலகம், அரசுப்பள்ளி, கோவில்கள், டாஸ்மாக் கடை என பல்வேறு இடங்களில் நடந்த திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் கடும் பீதியில் உள்ளனர். மேற்குறிப்பிட்ட திருட்டு சம்பவங்களில் சிலவற்றில் வழக்கு கூட பதியவில்லை. தொடர் திருட்டு சம்பவங்களில் ஒருவரைக்கூட கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறிவருவது பொதுமக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.கடலுார் மாவட்ட எஸ்.பி., உரிய நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடித்து, பொதுமக்களின் அச்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X