| நகை வாங்குவது போல் நடித்துரூ.1.25 லட்சம் நகை திருட்டு Dinamalar
நகை வாங்குவது போல் நடித்துரூ.1.25 லட்சம் நகை திருட்டு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
01:44

பண்ருட்டி: பண்ருட்டி நகைகடையில் நகைவாங்குவது போல் நடித்து நகையை திருடி சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். பண்ருட்டி மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தேவநாதன்,46; இவர் பண்ருட்டி ராஜாஜி சாலையில் நகை கடை வைத்துள்ளார். இவரது கடையில் கடந்த ஜூலை 31 ம்தேதி விற்பனையாளராக பணியிலிருந்த மணிவண்ணன், கொளஞ்சியப்பன் ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது 45 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் நகைபார்ப்பது போல் பார்த்து விட்டு, 8 கிராம் மதிப்புள்ள மோதிரம் -2, 20 கிராம் எடையுள்ள தோடு ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளார். இவற்றின் மதிப்பு 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயாகும். நகை குறைந்துள்ளது குறித்து கடையில் உள்ளவர்கள், கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவினை பார்த்ததில் பெண் திருடியது தெரியவந்தது.இதுகுறித்து தேவநாதன் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குபதிந்து. நகைதிருடிய பெண்ணை தேடிவருகின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X