| பொன்னர் சங்கர் நாடகம் லயித்த பொதுமக்கள் Dinamalar
பொன்னர் சங்கர் நாடகம் லயித்த பொதுமக்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
01:46

திருப்பூர்:திருப்பூரில் பொன்னர், சங்கர் நாடக, உடுக்கை பாடல் நிகழ்ச்சி இடுவம்பாளையத்தில் நடந்து வருகிறது.எம்பெருமாள் கலைக்குழு சார்பில் பொன்னர் சங்கர் சரித்திர வீரவரலாற்று கதை மற்றும் நாடகம், உடுக்கை பாடல் நிகழ்ச்சி இடுவம்பாளையம் காமாட்சியம்மன் கோவில் அருகில் நடந்து வருகிறது. பொன்னர் சங்கர் வரலாற்றுக் கதையின் ஒரு பகுதியாக, குன்றுடையார், தாமரை நாச்சியாரின் குமாரர்களான, பொன்னர், சங்கர் திருமண நிகழ்ச்சி குறித்து பாடப்பட்டது. திருமணத்துக்காக, உறவுகளை அழைத்தல், ஊர் சொந்தங்களுக்கு அழைப்பு விடுத்தல், கல்யாண வைபவம் ஆகியவை நாடகமாக நடித்து காண்பிக்கப்பட்டது.கடந்த, 10ம் தேதி துவங்கிய நாடக நிகழ்ச்சி கோவில் மைதானத்தில் தினமும் இரவு, 8:45 முதல், நள்ளிரவு, 12:00 மணி வரை நடக்கிறது. 20 நாட்கள் தொடர்ந்து நிகழ்ச்சி நடக்கிறது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X