ரோட்டில் நின்ற பள்ளி மாணவர் கலெக்டரை சந்திக்க அனுமதி மறுப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
01:55

திருப்பூர்:'டாஸ்மாக்' மதுக்கடை தொந்தரவு குறித்து முறையிட வந்த மாணவ, மாணவியரை போலீசார் அனுமதிக்காததால், பல்லடம் ரோட்டில், வெயிலில் காத்திருந்தனர்.திருப்பூர் மாநகராட்சி, விஜயாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 1,300க்கும் அதிகமானோர் படிக்கின்றனர். பஸ் வசதியில்லாததால், தினமும் நடந்தே பள்ளிக்கு சென்று வருகின்றனர்.அவ்வழியில், 'டாஸ்மாக்' மதுக்கடை இருப்பதால், மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, பகல் நேரத்திலேயே பெண்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மதுக்கடையை அகற்ற, மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டுமென, மாணவ, மாணவியர் கலெக்டரை சந்தித்து முறையிட நேற்று வந்திருந்தனர். கலெக்டர் அலுவலக மெயின்கேட்டில் இருந்த போலீசார், 'மாணவ, மாணவியரை அனுமதிக்க முடியாது;,' என்று வழிவிட மறுத்தனர்.இதனால், நான்கு பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். முக்கிய பிரச்னைக்காக முறையிட வந்த, பள்ளி, மாணவ, மாணவியர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால், கலெக்டரை சந்திக்க வந்த மாணவ, மாணவியர், பல்லடம் ரோட்டில், வெயிலில் நின்றிருந்தனர்.மாணவ, மாணவியர் கூறுகையில், 'மதுக்கடை தொல்லை குறித்து, முறையிட வந்தோம்; கலெக்டரை சந்திக்கவே இவ்வளவு 'கெடுபிடி' செய்கின்றனர். எங்களை அனுமதிக்காவிட்டாலும் பரவாயில்லை; மதுக்கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan -  ( Posted via: Dinamalar Android App )
20-ஆக-201902:05:06 IST Report Abuse
Srinivasan மாணர்களுக்கு கலெக்டரை சந்திக்க அனுமதி மறுத்தது நியாயமா??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X