| இணைப்பில்லா பாதாள சாக்கடைகள் Dinamalar
இணைப்பில்லா பாதாள சாக்கடைகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
02:20

45,48,49 வார்டு பகுதிகளில், 2010 முதல் 2012 வரை பாதாள சாக்கடைப் பணி நடந்தது. ஆனால், கக்கன் வீதியில் இதுவரை பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கவில்லை. இதனால், குடியிருப்பில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை, சங்கனுார் பள்ளத்தில் கலக்க விடும் அவலம் நிகழ்கிறது. பொது சுகாதாரம் பாதிக்கப்படுவதால், உடனடியாக பாதாள சாக்கடை இணைப்பு வழங்க வேண்டும்.- முகமது, கக்கன் வீதி.

ஆக்கிரமிப்பால் அவதிசூலுாரிலிருந்து பாப்பம்பட்டி வரும் வழியில், பாப்பம்பட்டி பிரிவு பேருந்து நிறுத்தம் அருகே, திருச்சி ரோட்டில் நடைபாதையில், லாரிகள் வரிசையாக நிறுத்தப்படுகின்றன. நடைபாதை ஆக்கிரமிப்பால், சாலையில் இறங்கி நடக்கும் பாதசாரிகள் விபத்துக்குள்ளாகின்றனர். இதேபோல், திருச்சி சாலையிலும், அனுமதியின்றி லாரிகள் நிறுத்துவதால், போக்குவரத்து பாதிக்கிறது. பலமுறை புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- உமா, சூலுார்.

மாட்டுக்கொட்டகையாக மாறிய 'ரிசர்வ் சைட்'மாநகராட்சி, 90வது வார்டுக்குட்பட்ட, ஐஸ்வர்யம் நகரில், பூங்காவுக்காக, 'ரிசர்வ் சைட்' ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை சுற்றிலும், கம்பி வேலிகள் அமைக்கப்பட்டதுடன், இதுகுறித்த அறிவிப்பு பலகையும், மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பூங்கா கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வெறுமனே உள்ள இந்த காலி இடம், தற்போது மாடுகள் கட்டும் இடமாக மாறி விட்டது. அதிகாரிகள் இப்பகுதியை ஆய்வு செய்து, பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுப்ரமணி, ஐஸ்வர்யம் நகர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X