| ஊருக்குள் ரகளை செய்து வந்த குரங்கு சிக்கியது Dinamalar
ஊருக்குள் ரகளை செய்து வந்த குரங்கு சிக்கியது
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
02:22

தொண்டாமுத்துார்:கெம்பனுாரில், குடியிருப்பு பகுதியில், பல மாதங்களாக சுற்றித்திரிந்து வந்த குரங்கு, கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது.தொண்டாமுத்துார் பேரூராட்சிக்குட்பட்ட கெம்பனூர், அண்ணாநகர் பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில், கடந்த ஆறு மாதங்களாக குரங்கு ஒன்று உலாவி வருகிறது.


இக்குரங்கு வீடுகளுக்குள் புகுந்து, பொருட்களை எடுத்து செல்வதும், மனிதர்களை தாக்குவதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது. இந்த ஆறு மாதத்தில், 20க்கும் மேற்பட்டோரை, குரங்கு தாக்கியுள்ளதாக, அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.ரகளையில் ஈடுபட்டு வரும் குரங்கை பிடித்து, வனப்பகுதிக்குள் விட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.


இதனையடுத்து, மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின்பேரில், கோவை வனச்சரகர் (பொ) சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர், பட்டாசு வெடித்து குரங்கை வனப்பகுதியில் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.இருப்பினும், அக்குரங்கு குடியிருப்பு பகுதியை விட்டு செல்லாமல் இருந்தது. இறுதியில், குரங்கை பிடிக்க, வனத்துறையினர் கூண்டு வைத்தனர். நேற்று காலை, கூண்டில் குரங்கு அகப்பட்டது. இதனையடுத்து, பிடிபட்ட குரங்கை, சிறுவாணி - சர்க்கார் போர்த்தி வனப்பகுதியில் விடுவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X