| மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு மத்திய செயலர் ஆய்வு Dinamalar
மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு மத்திய செயலர் ஆய்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
02:22

கோவை:'ஜல் சக்தி அபியான்' திட்ட செயலாக்கத்தை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள, மத்திய கால்நடை மற்றும் மீன்வளத்துறை துணை செயலாளர் சர்பேஸ்வரர் மஜி, கோவை மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு தொடர்பாக, நேற்று ஆய்வு செய்தார்.


முன்னதாக, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி முன்னிலையில் நடந்த, ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று, அறிவுரை வழங்கினார். பின், மாநகராட்சி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை பார்வையிட்டார்.உக்கடம் பெரிய குளத்தில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள், வெள்ளலுார் குளத்தில் தேக்கியுள்ள தண்ணீர் இருப்பு மற்றும் 'மியாவாக்கி' முறையில் குறுங்காடு உருவாக்கி இருப்பதை பார்வையிட்டார்.


அதன்பின், மாநகராட்சி துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள, கட்டமைப்பு மற்றும் தாஜ் விவாந்தா, ரெசிடென்சி மற்றும் அன்னபூர்ணா உணவகங்களில் அமைத்துள்ள மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை, பார்வையிட்டு உறுதி செய்தார்.உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜ், நிர்வாக பொறியாளர் சரவணக்குமார், உதவி நிர்வாக பொறியாளர் சுந்தரராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X