| ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கொதிப்பு Dinamalar
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கொதிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
02:24

கோவை:கோவை மாவட்டத்தில் சுதந்திர தின விழா நற்சான்றிதழ் வழங்குவதில் பாரபட்சம் காண்பிக்கப்பட்டுள்ளதாக, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் புகார் எழுப்பியுள்ளனர்.கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த சுதந்திர தின விழாவில், சிறப்பாக பணியாற்றியஅரசுத்துறை அலுவலர்களுக்கு, நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. துறை வித்தியாசம் இன்றி, அனைத்து துறையினருக்கும் கலெக்டர் சான்றிதழ்களை வழங்கினார்.இதில், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களுக்கு நற்சான்றிதழ் வழங்குவதில் பாரபட்சம் காண்பிக்கப்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.'ஜாக்டோ - ஜியோ' போராட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள், ஊழியர்கள் பெயர் மட்டும், நற்சான்றிதழ் பட்டியலில் விடுபட்டுள்ளதாக,ஊழியர்கள் கூறுகின்றனர்.'தமிழகத்தின் பிற மாவட்டங்களில், இந்த வித்தியாசம் பார்க்கப்படவில்லை என்றும், கோவை மாவட்டத்தில் மட்டும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது' என்றும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X