பேரூர்:தொண்டாமுத்துார் வட்டாரத்தில், நெல் நாற்றாங்கால் தயாரான நிலையில், நடவுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.தொண்டாமுத்துார் வட்டாரத்தில் சாடிவயல், பச்சான்வயல், நல்லுார் வயல், முட்டத்துவயல், செம்மேடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார், 500 ஏக்கர் பரப்பளவில், ஆண்டுதோறும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.இப்பகுதி விவசாயிகள், வைதேகி வாய்க்கால், நீலிவாய்க்கால் மற்றும் போர்வெல் பாசனத்தில் நெல் சாகுபடியில் ஈடுபடுகின்றனர். நடப்பாண்டு, தென்மேற்கு பருவமழை காலம் கடந்து பெய்ததால், நெல் விவசாயிகள் சின்னவெங்காய விவசாயத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில், கடந்த 3ம் தேதி முதல், தொடர் மழை பெய்தது. இதை பயன்படுத்தி, நெல் நடவுக்காக நிலங்களை உழுது வருகின்றனர்; இன்னும், சில தினங்களில் நடவு பணியை துவக்க உள்ளனர்.