யு.ஜி.டி., வேலை முடிஞ்சும் தொடருது 'டிராஜடி!' சுண்டக்காமுத்தூர் மக்கள் தினமும் அவதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
02:26

பள்ளியருகே சுகாதாரமில்லைமேட்டுப்பாளையம் ரோடு, கங்கா மருத்துவமனை எதிரே டி.ஏ.ராமலிங்கம் செட்டியார் அரசு உதவி பெறும் பள்ளி எதிரே, குப்பை சிதறி காணப்படுகிறது.- ரகுமான், சாய்பாபா காலனி.

89வது வார்டில் திறந்த சாக்கடைசுண்டக்காமுத்துார், ராமசெட்டிபாளையம், 89வது வார்டில், பணிகள் முடிந்து இரண்டு மாதங்களாகியும், பாதாள சாக்கடை மூடப்படாமல் உள்ளது.- பாண்டியன், சுண்டக்காமுத்துார்.

கணபதி மாநகரில் வழியும் தொட்டிகள்கணபதி மாநகர் பகுதியில், சீராக குப்பை அகற்றாததால், தொட்டிகள் நிரம்பி வழிகின்றன.- பிரசன்னா, கணபதி மாநகர்.

ஸ்ரீனிவாச நகரில் வீணாகும் நீர்குறிச்சி ஹவுசிங் யூனிட், ஸ்ரீனிவாச நகரில் அமைந்துள்ள குடிநீர் வினியோக தொட்டியில், அடிக்கடி தண்ணீர் நிரம்பி வழிகிறது.- குகன், ஸ்ரீனிவாச நகர்.

பாரதி பார்க் ரோட்டில் பாதிப்பணிசாய்பாபாகாலனி, பாரதிபார்க் ரோடு, ஆறாவது கிராஸ் பகுதியில், பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப்பணியால், மிகுந்த சிரமத்தை சந்திக்கிறோம்.- கிருஷ்ணா, சாய்பாபாகாலனி.

பாலசுந்தரம் ரோட்டில் குப்பைபாலசுந்தரம் ரோடு, மத்திய ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரே, கடந்த ஒரு வாரமாக, குப்பை குவியல், தேங்கியுள்ளது.- வினோத்குமார், குனியமுத்துார்.

எம்.ஜி.ஆர்., காலனியில வெளிச்சமில்லைஇடையர்பாளையம், எம்.ஜி.ஆர்., காலனி, காந்திமகள் மெட்ரிக் பள்ளி அருகில் தெருவிளக்குகள் எரிவதில்லை.- தனலட்சுமி, எம்.ஜி.ஆர்., காலனி.

பாரி நகரில் குப்பை மயம்தடாகம் ரோடு, இடையர்பாளையம், பாரிநகரில், சாலையெங்கும் குப்பை மையமாக காட்சியளிக்கிறது.- நிர்மலா, பாரிநகர்.

நேரு வீதியில் புதிய விளக்குகள் 'மக்கார்'மாநகராட்சி, 98வது வார்டு, சாரதாமில் ரோடு, நேரு வீதியில், புதிதாக பொருத்திய தெருவிளக்குகள் எரியவில்லை.- குமாரசாமி, நேருவீதி.

விபத்துக்கு வழிவடவள்ளி முதல் சிங்காநல்லுார் வழித்தடத்தில் இயக்கப்படும், 1சி எண் கொண்ட தனியார் பேருந்தில், கைப்பிடி உடைந்துள்ளது. இது, விபத்துக்கு வழிவகுக்கும்.- சுந்தர், வடவள்ளி.

சுங்கத்தில் உடைந்த சாக்கடைசுங்கம், சிந்தாமணி பேருந்து நிறுத்தம் அருகே, சாலை நடுவே உடைந்துள்ள பாதாள சாக்கடையால், விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.- சித்திக், சுங்கம்.

நஞ்சுண்டாபுரத்தில் தாறுமாறாக தடுப்புகள்நஞ்சுண்டாபுரம் ரோடு, ஐ.ஓ.பி., வங்கி எதிரில், தாறுமாறாக அமைக்கப்பட்டுள்ள சாலைத் தடுப்புகளை ஒழுங்குபடுத்த வேண்டும்.- கார்த்திக், ராம்நகர்.

சுகாதாரப்பணி சுணக்கம்கெம்பனுாரில் சேகரிக்கப்படும் குப்பையை முறையாக அகற்றாமல், மயானம் செல்லும் வழியில், துப்புரவு பணியாளர்கள் கொட்டிச் செல்கின்றனர்.- பொதுமக்கள்,

சங்கராலிங்கா வீதியில் சாலை சேதம்மணியகாரம்பாளையம், சங்கராலிங்கா வீதியில், சாலை மிக மோசமாக சேதமடைந்துள்ளது.- ரேவதி, மணியகாரம்பாளையம்.

நேதாஜி நகரில் குடிநீரின்றி தவிப்புகோவை மாநகராட்சி, 75வது வார்டு, நேதாஜி நகர் விரிவாக்க பகுதியில், தாமதமாகும் குழாய் சீரமைப்பு பணியால், குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது.- தமிழலகன், நேதாஜி நகர்.

அபிராமி நகர் மக்கள் சிரமம்நவாவூர் பிரிவு, அபிராமி நகரில் தெருவிளக்கு மற்றும் தார்சாலை வசதியில்லாததால், மக்கள் சிரமப்படுகின்றனர்.- அனன்யா, அபிராமி நகர்.

மத்திய மண்டலம் அருகிலும் சுகாதாரமில்லைராமநாதபுரம், கருணாநிதி நகரில், மாநகராட்சி மத்திய மண்டலம் அருகில், பல வாரங்களாக சாலையில் குப்பை தேங்கியுள்ளது.- சுந்தர், ராமநாதபுரம்.

மீனா எஸ்டேட்டில் விளம்பர பதாகைகள்மீனா எஸ்டேட், நான்காவது கிராஸ் வீதியில், சாலையில் விதிமீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்ற வேண்டும்.- சுப்புராஜ், மீனா எஸ்டேட்.

போக்குவரத்துக்கு இடைஞ்சல்காந்திபுரம் நகர பேருந்து நிலையத்திற்குள் அமைந்துள்ள கடைகளால், போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுகிறது.- சுந்தர் வர்கீஸ், சேரன்மாநகர்.

சூர்யா கார்டனில் சாய்ந்த மின்கம்பம்பீளமேடு, பாரதி காலனி, சூர்யா கார்டன், இரண்டாவது வீதியில், சேதமடைந்து சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றிஅமைக்க வேண்டும்.- உதயகுமார், பாரதி காலனி.

ராம்நகரில்துர்நாற்றம்ராம்நகர், டெல்லி வாலா ஓட்டல் அருகில், திறந்தவெளியில் கொட்டப்படும் உணவக கழிவுகளால், துர்றாற்றம் வீசுகிறது.- சிவா, ராம்நகர்.

ஆக்கிரமிக்கும் பதாகைகள்வடவள்ளி, திருவள்ளுவர் மாநகராட்சி பேருந்து நிலையத்திற்கு அருகில், சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்ற வேண்டும்.- முத்துக்குமார், வடவள்ளி.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X