வலியுறுத்தல்! 150 நாட்களுக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் ... வைகை அணை இம்மாத இறுதியில் திறப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
03:05

மதுரை : பாசனத்திற்காக பொதுப்பணித்துறை பரிந்துரையை ஏற்று வைகை அணையை இம்மாத இறுதியில் திறக்க அரசு பரிசீலித்து வருகிறது. இரு போக சாகுபடிக்கு பதில் ஒரு முறை சாகுபடி செய்வதற்கு வசதியாக 150 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.



இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்கியதால் பெரியாறு, வைகை அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை. இதனால் முதல் போக சாகுபடி செய்ய இயலவில்லை. கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்வதால் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி பெரியாறு அணை நீர் மட்டம் 130.70 (மொத்தம் 152 அடி) அடியாக உள்ளது. நீர் வரத்து 1,150 கன அடியாகவும், வெளியேற்றம் 1,700 கன அடியாகவும் உள்ளது.

வைகை அணை நீர் மட்டம் 45.96 (மொத்தம் 71 அடி) அடியாக உள்ளது. நீர்வரத்து 1,592 க.அ., வெளியேற்றம் 60 க.அ.,யாக உள்ளது.



பேரணை முதல் கள்ளந்திரி வரையிலான இரு போகம் சாகுபடியாகும் 45 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற அணைகளின் தண்ணீர் இருப்பு தேவையான அளவு இருப்பதால் வைகை அணையை திறக்க பொதுப்பணித்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இம்மாத இறுதியில் தண்ணீர் திறக்க அரசு பரிசீலித்து வருகிறது. விவசாயிகள் தர்மராஜ், திருப்பதி கூறியதாவது:

இந்தாண்டு மழையின்றி முதல் போகம் பொய்த்தது. இரு போக சாகுபடிக்கு பதில் ஒரு முறை சாகுபடி செய்ய வசதியாக 150 நாட்களுக்கு தண்ணீர் திறந்தால் தான் விவசாயிகள் நஷ்டத்தில் இருந்து மீள முடியும்.



குறுகிய கால நெல் ரகங்களை பயிரிட்டால் நெற் கதிர்களில் பால் பிடிக்கும் நேரத்தில் நவம்பரில் துவங்கும் வடகிழக்கு பருவமழையால் பூக்கள் உதிர்ந்து பால் பிடிக்காமல் நஷ்டம் ஏற்படும். நீண்ட கால பயிராக 150 நாள் விளையும் நெல் ரகங்களை பயிரிட்டால் நஷ்டம் ஏற்படாது.

இதை அனுசரித்து முதல் இரண்டு மாதங்கள் தினமும் 900 கன அடி வீதம் தொடர்ந்து தண்ணீர் திறக்க வேண்டும். மூன்றாவது மாதத்தில் இருந்து முறை வைத்து தண்ணீர் திறக்க வேண்டும் என்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X