மதுரை, : மதுரையில் தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுனர் பேரவை சார்பில் விழியகம், அன்பகம் மற்றும் ரோஜாவனத்தில் நிறுவனர் தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கும் விழா நடந்தது.
பேரவை செயலர் சேகவுப்பெருமாள் தலைமை வகித்தார். பொருளாளர் சிதம்பரம் முன்னிலை வகித்தார். தலைவர் திருமுருகன், துணை தலைவர் ஆறுமுகம் பங்கேற்றனர். ரோஜாவனம் ஆதரவற்றோர் நிறுவனத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களும் வழங்கப்பட்டன. இணை செயலர் மூர்த்தி நன்றி கூறினார்.