சதுப்பு நிலத்தில் குப்பை கிடங்குகள் வேறு இடத்துக்கு மாற்ற பரிந்துரை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
03:15

சென்னை : சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள குப்பை கிடங்குகளை வேறு இடத்துக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும்படி நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டிருந்த மூத்த வழக்கறிஞர் பரிந்துரை அளித்துள்ளார்.



சதுப்பு நிலங்களை பாதுகாக்க உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. சதுப்பு நிலங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமனை உயர் நீதிமன்றம் நியமித்தது.

நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ராமன் தாக்கல் செய்த அறிக்கை: பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஆயிரத்து ௪௦௦ ஏக்கர் பரப்பில் இருந்தது. குடியிருப்புகள் தகவல் தொழில்நுட்ப நிறு

வனங்கள் உயர் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றால் ௨௦௧௩ல் ௧௪௭௦ ஏக்கராக சுருங்கியது.

பெருங்குடி தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையின் கிழக்குப் பகுதியில் குப்பை

கிடங்குகள் உள்ளன.



சதுப்பு நிலத்தில் உள்ள குப்பை கிடங்குகளை வேறு இடத்துக்கு மாற்ற சென்னை மாநகராட்சி

யிடம் வனத் துறை கேட்டுள்ளது. பெருங்குடி குப்பை கூடத்தை திருவள்ளூர் மாவட்டத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுத்தபோது அந்தப் பகுதி மக்களின் எதிர்ப்பால் தடை ஏற்பட்டது.

குப்பை கொட்டுவதற்கு மாற்று இடத்தை தேர்வு செய்யவும் அதுவரை தற்போது கொட்டப்படும் இடத்தின் அளவை குறைக்கவும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாடி ரயில் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறு வனம் மத்திய கற்றாலை மின்சக்தி நிறுவனம் 1000க்கும் மேல் குடியிருப்புகள் சதுப்பு நிலத்தில் ௧௦௦ ஏக்கரில் உள்ளன.



சதுப்பு நிலத்தில் ஆக்கிரமிப்புகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய மாநகராட்சி வனத் துறை பதிவுத் துறை வருவாய் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. திண்டிவனத்தில் உள்ள கழுவேலி சதுப்பு நிலம் ௬௦௦ல் இருந்து ௭௫ சதுர கி.மீ. ஆக சுருங்கி விட்டதாகவும் சட்டவிரோதமாக இயங்கும் இறால் பண்ணைகளை அகற்றவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அறிக்கை குறித்து அரசு பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் மணிக்குமார் சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' விசாரணையை நாளை தள்ளி வைத்தது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X