| மின் மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு Dinamalar
மின் மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
03:19

கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி அருகே கருங்காலக்குடி ஊராட்சிக்குட்பட்ட செண்பகநகரில் வீட்டுக்குழாய்களில் மின் மோட்டாரை பொருத்தி குடிநீர் திருடுவோர்களை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என கிராமத்தினர் புகார் தெரிவித்தனர்.



இங்கு இரண்டாயிரம் பேர் வசிக்கின்றனர். ஊராட்சி நிர்வாகம் மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் சப்ளை செய்கிறது. வீடுகளில் வழங்கப்பட்ட இணைப்புகளில் சிலர் மின் மோட்டார்களை பொருத்தி குடிநீர் திருடுகின்றனர். இதனால் அருகிலுள்ள வீடுகளில் குடிநீர் சப்ளை பாதிக்கப்படுகிறது. விவசாயி பரக்கத்துல்லா கூறியதாவது: மின் மோட்டார் பொருத்தி குடிநீர் திருடுவோர் நடவடிக்கை எடுக்காமல் இருக்க ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய ஊழியர்களை கவனித்து விடுகின்றனர்.




ஊழியர்களும் பணத்திற்கு தகுந்தவாறு குழாய்களின் அளவுகளை மாற்றி கொடுக்கின்றனர். மின் மோட்டார் மூலம் குடிநீர் திருடுவதால் பக்கத்து வீடுகளுக்கு குடிநீர் கிடைப்பதில்லை என்றார். பி.டி.ஒ., (கிராம ஊராட்சி: வேலவன் கூறுகையில், ''குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய கூடுதலாக தெருக்குழாய் இணைப்பு வழங்கப்படும். முறையான அறிவிப்பு வெளியிட்டு குடிநீர் திருடுவோரின் மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X