| பெருமாக்கி புதூரில் அதிகாரிகள் ஆய்வு Dinamalar
பெருமாக்கி புதூரில் அதிகாரிகள் ஆய்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
03:20

கொட்டாம்பட்டி, : கொட்டாம்பட்டி அருகே பெருமாக்கி புதுாரில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதாக வெளியான தினமலர் செய்தி எதிரொலியாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.



இங்கு 200 பேர் வசிக்கின்றனர். சில வாரங்களாக காவிரி மற்றும் உள்ளூர் போர்வெல்களிலிருந்து குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் கிராமத்தினர் கருப்பு கோயில் பாறையில் தேங்கியுள்ள நீரை குடிக்க எடுத்து சென்றனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

அதன் எதிரொலியாக குடிநீர் பிரச்னையை ஆய்வு செய்ய ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு கலெக்டர் ராஜசேகர், ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் செல்லத்துரை உத்தரவிட்டனர்.



பி.டி.ஒ.,(கிராம ஊராட்சி)வேலவன் தலைமையில் ஒன்றிய அதிகாரிகள் பெருமாக்கி புதுாரை ஆய்வு செய்தனர். காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X