தேவாரத்தில் காட்டு யானைகளால் பயிர்கள் சேதம்... தொடர்கிறது!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
06:26

தேவாரம் : தேவாரம் அருகே காட்டு யானைகள் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்வதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். வனத்துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து போராட முடிவு செய்துள்ளனர்.




தேவாரம் வனப்பகுதியில் ஒற்றை காட்டு யானையும், இரண்டு யானைகள் சேர்ந்தும் வசிக்கின்றன. ஆட்களை அடித்து கொல்லும் ஒற்றை யானையின் நடமாட்டம் கடந்த ஒரு மாதமாக இல்லாததால் விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர். இந்நிலையில், இரண்டு யானைகள், பெரம்புவெட்டி, பிள்ளையாரூத்து புலத்தில் உள்ள நிலங்களில் புகுந்து தென்னை, வாழை, கரும்பு, மரவள்ளி செடிகளை சேதப்படுத்துகின்றன.




கடந்த நான்கு நாட்களில் இந்த யானைகளால் 200க்கும் மேற்பட்ட பலனளிக்கும் தென்னை மரங்கள் சேதமாகியுள்ளன. பயிர் சேதத்தை பார்வையிடும் வனத்துறையினர் உரிய நிவாரணம் பெற்றுத்தர வீண் காலதாமதம் செய்கின்றனர் என்ற புகார் உள்ளது. இதை கண்டித்து கடையடைப்பு, உண்ணாவிரதம் இருக்க விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.




வீணாகின்றன:



தேவாரம் விவசாயி திரவியராஜ் கூறுகையில், ''பிள்ளையாரூத்து புலத்தில் எனது தோட்டம் உள்ளது. கடந்த மூன்று நாட்கள் தொடர்ச்சியாக எனது தோப்பில் உள்ள தென்னை மரங்களை, இந்த யானைகள் சேதப்படுத்துகின்றன. குறைந்த வயதுடைய மரங்களின் குருத்துகளை உருவி எடுத்து சாப்பிடுகிறது. இதனால் அந்த மரங்கள் வீணாகி விடுகின்றன. பெரிய மரங்களை முட்டி கீழே தள்ளி விடுகிறது. இதுவரை ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள 100 மரங்கள் சேதமடைந்துள்ளன. வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தால் இரவு தோட்டத்திற்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுரை வழங்குகின்றனர். யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X