| கோயில் நில ஆக்கிரமிப்புதடுக்க கோரி புகார் மனு Dinamalar
கோயில் நில ஆக்கிரமிப்புதடுக்க கோரி புகார் மனு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
06:31

வடமதுரை : வெள்ளபொம்மன்பட்டியில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து நாடக மேடையை அமைக்கும் முயற்சியை தடுக்க கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு வழங்கினர். வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் காளியம்மன், மாரியம்மன், முத்தாலம்மன், பகவதியம்மன் கோயில் உள்ளது. இதற்கு முன்பகுதியில் காலியாக இருக்கும் இடத்தில் திருவிழா காலங்களில் பொங்கல் வைத்தல், சலகெருது ஓட்டம் விடுதல், நாடகம் நடத்துதல் போன்றவை நடந்து வருகிறது.இதன் அருகில் இருக்கும் சிலர் இந்த பொது இடத்தில் சொந்த நிதியில் நாடக மேடை கட்டும் நோக்கில் நேற்றுமுன்தினம் சிலர் கற்களை கொட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கிராம பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் இதுகுறித்து வடமதுரை போலீசிலும், மாவட்ட கலெக்டரின் மனுநீதி நாள் முகாமிலும் புகார் செய்துள்ளனர். விசாரித்து நடவடிக்கை எடுக்க வேடசந்துார் தாசில்தாருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X