| கூடைப்பந்தாட்ட வீரர்களுக்கு அழைப்பு Dinamalar
கூடைப்பந்தாட்ட வீரர்களுக்கு அழைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
06:35

பெரியகுளம் : தேனி மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் பி.சி.சிதம்பரசூரியவேலு அறிக்கை: தமிழ்நாடு கூடைப்பந்தாட்டக்கழகம் நடத்தும் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு, மாவட்டங்களுக்கு இடையேயான மாநில கூடைப்பந்துப்போட்டி செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. தேனி மாவட்ட ஆண்கள் அணித்தேர்வு ஆக. 23 காலை 7:00 மணிக்கு பெரியகுளம் தென்கரை பி.எஸ்.டி.நினைவு விளையாட்டரங்கில் நடக்கிறது. பங்கேற்போர் 2001 ஜன., 1க்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும். தக்க கல்விச் சான்றுகளுடன் விளையாட்டு வீரர்கள் வரவேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X