இலவச வீட்டுமனைப்பட்டா பெற்று இடத்தை தேடும் மக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
06:37

தேனி : இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கி 17 ஆண்டாகியும் இடத்தை தேடி அலையும் மக்கள், தேனி கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.




2002 ல் முதல்வராக இருந்த ஜெ., ஆண்டிபட்டி- சேடபட்டி கூட்டு குடிநீர் திட்ட துவக்க விழாவில் மேக்கிழார்பட்டியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 240 பேருக்கு வீட்டு இலவச வீட்டுமனைபட்டா வழங்கினார். இவர்களுக்கு இதுவரை பட்டாவிற்கு உரிய இடத்தை அளந்து கொடுக்க வில்லை. இடம் வழங்க கோரி தற்போதுள்ள கலெக்டரிடம் மனு நீதிநாளில் 4 முறை மனு அளித்தும் பிரச்னை தீரவில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம், லோக்சபா தொகுதி கட்சி பொறுப்பாளர் தமிழ்வாணன் தலைமையில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாளில் தேனி கலெக்டர் அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரசத்திற்கு பின் கலெக்டர் பல்லவி பல்தேவிடம் மீண்டும் மனு அளித்தனர்.இடம் ஆக்கிரமிக்க முயற்சி சின்னமனுார் காந்திநகர் காலனி டோபிகாலனி சங்க தலைவர் முருகன், கலெக்டரிடம் வழங்கிய மனுவில், '' வீடு இல்லாத சலவை, சவரத்தொழிலாளர்களுக்கு 1982 ல் எம்.ஜி.ஆர்., ஆட்சியின் போது 126 பேருக்கு தலா 3 சென்ட் இடத்திற்கு பட்டா வழங்கப்பட்டது. இதில் பலர் வீடுகட்டி குடியிருந்து வருகின்றனர். இதில் அங்கன்வாடி, பொது பயன்பாட்டிற்காக 30 சென்ட் காலியிடம் உள்ளது. இந்த இடத்தை சிலர் ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றனர். இதனால் எங்களுக்குள் பிரச்னை ஏற்படுகிறது.எனவே, காலியிடத்தில் அங்கன்வாடி,ரேஷன் கடை கட்டிதர வேண்டும் ,'என குறிப்பிட்டுள்ளனர்.* மயிலாடும்பாறை, மூலக்கடை பொதுமக்கள் வழங்கிய மனுவில் ,'மூலக்கடையில் உள்ள ஒருவரின் பெட்டிகடையில் 24 மணிநேரமும் தடையின்றி மதுபாட்டில் விற்பனை நடக்கிறது. மது குடிக்க வருவோரால் அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது. போதை நபர் ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று அடித்துவிரட்பட்டார். போதையில் திருட்டில் ஈடுபடுகின்றனர். கடைக்காரரிடம் மது விற்க கூடாது என கிராமத்தினர் கூறினால் தகராறு செய்கிறார். பெட்டி கடையில் மது விற்பதை தடுக்க வேண்டும், 'என, வலியுறுத்தி உள்ளனர்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஆக-201910:54:19 IST Report Abuse
ஆப்பு அடடே...கொஞ்சம் பொறுங்க. இப்போ இடைப்பாடியாரும் ஏழைகள் எல்லாருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா கொடுக்கப் போறாராம். அப்புறம் சேர்ந்து தேடலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X