| தேனியில் லாட்டரி விற்ற மூவர் கைது Dinamalar
தேனியில் லாட்டரி விற்ற மூவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
06:38

தேனி : தேனியில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரிகளை விற்பனை செய்த மூவரை, தினமலர் செய்தி எதிரொலியாக போலீசார் கைது செய்தனர்.




தேனியில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி, நம்பர் லாட்டரி விற்பனை அமோகமாக நடப்பது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக போலீசார் நடவடிக்கையில் இறங்கினர். மாரியம்மன் கோவில்பட்டி தெற்குத் தெரு பாண்டியன் 40. இவர் தேனி சந்தை கேட் டீக்கடை அருகே கேரள லாட்டரிகளை விற்பனை செய்தார். இவரை தேனி எஸ்.ஐ., லதா, கைது செய்தார். தலா ரூ.30 மதிப்பில் 11 லாட்டரிகள் பறிமுதல் செய்தார்.* அல்லிநகரம் அம்பேத்கர் தெற்குத் தெரு முகமதுகனிபா 70. இவர், தேனி மரக்கடை சந்தில் கேரள லாட்டரிகளை தலா ரூ.30 வீதம் விற்பனை செய்தார். இவரை தேனி இன்ஸ்பெக்டர் விக்டோரியா கைது செய்தார். 23 லாட்டரி சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.690 ஆகும்.* தேனி சுப்பன்செட்டித் தெரு கல்யாணசுந்தரம் 65. இவர் தேனியில் உள்ள ஸ்ரீராம், கிருஷ்ணா தியேட்டர் அருகில்லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்தார். அவரிடமிருந்த 12 லாட்டரிகள் பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். அதன் மதிப்பு ரூ.360 ஆகும்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X