தேனி : வீட்டை சேதப்படுத்தி பணத்தை திருடிச் சென்றவர்கள் மீது நடவடிக்கை கோரி தேனி எஸ்.பி.,யிடம் மனு அளித்து திரும்பிய கருப்பையா 62, பஸ்நிறுத்தத்தில் மயங்கி விழுந்து இறந்தார்.
சின்னமனுார் சேர்மன் சுரேஷ் தோட்டம் 3வது தெருவை சேர்ந்தவர் கருப்பையா. அயர்ன் செய்யும் தொழில் செய்தார்.இவரது வீட்டில் ஜூன் 26ல் மர்மநபர்கள் புகுந்து சேதப்படுத்தி தீ வைத்து பொருட்கள் மற்றும் ரூ.22 ஆயிரத்தை திருடிச் சென்றுவிட்டனர். இன்ஸ்பெக்டரிடம் புகார் அளித்தார். நடவடிக்கை இல்லை. இதனால் உரிய நடவடிக்கைகோரி நேற்று மதியம் தேனி எஸ்.பி., பாஸ்கரனிடடம் மனு அளித்தார்.போலீசார் நடவடிக்கை காலதாமதமாகிறது என உறவினர்களிடம் விரக்தியோடு பேசிக் கொண்டிருந்த கருப்பையா, ஆட்டோவில் அவர்களுடன் அரண்மனைப்புதுார் விலக்கு பஸ் நிறுத்தத்திற்கு வந்தார். சின்னமனுார் செல்ல காத்திருந்தவர் திடீரென மயங்கிவிழுந்து இறந்தார்.தேனி போலீசார்விசாரிக்கின்றனர்.