| போலீஸ் ஸ்டேசன் முற்றுகை Dinamalar
போலீஸ் ஸ்டேசன் முற்றுகை
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
12:11

விருதாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே, மார்க்கெட் கமிட்டி அருகே இலங்கை அகதி முகாம் உள்ளது. இங்கு 76 குடும்பத்தை சேர்ந்த 250 பேர் வசித்து வருகின்றனர்.


இந்த பகுதியில், மர்ம நபர்கள் நடமாட்டம் அதிகரிப்பு, மது அருந்துதல், வீட்டு வாசல் முன் தேவையில்லாமல் நிற்பது, குளியல் அறைக்குள் குதிப்பது போன்று செயல்கள் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், நேற்று(ஆக.,19) இரவு, பெண் ஒருவரின் வீட்டு குளியல் அறைக்குள் குதித்த ஒருவர், நிர்வாணமாக நின்றுள்ளார்.


இதனை கண்டு அப்பகுதி மக்கள், அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஆனால், அந்நபரை போலீசார் விடுவித்து விட்டதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த அகதி முகாமில் வசிப்பவர்கள் விருத்தாசலம் போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X