கிராமசபை! வரும் 24ம் தேதி 108 கிராமங்களில்...உள்ளாட்சித் துறை அதிரடி உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2019
01:24

புதுச்சேரி:தண்ணீரை சேமிப்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, வரும் 24ம் தேதியன்று, அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்களை நடத்திட உள்ளாட்சித் துறை உத்தரவிட்டுள்ளது.



தண்ணீரை சேமிக்கும் நோக்கத்தில் 'ஜலசக்தி அபியான்' என்ற திட்டத்தை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. நிலத்தடி நீர் வளத்தை பெருக்கும் நோக்கத்தில், மழை நீரை தேக்கி வைக்கும் வகையில் ஏரி, குளம் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளையும் துார் வாரி ஆழப்படுத்துவது ஜலசக்தி அபியானின் முக்கிய நோக்கமாகும்.ஜலசக்தி அபியான் திட்டத்தில் புதுச்சேரி மாவட்டம் தேர்வு செய்யப்பட்டு, நீர்நிலைகளை துார் வாரும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. அரசு சார்பில் மட்டுமல்லாமல், தனியார் பங்களிப்புடனும் துார் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மாநிலம் முழுவதும் நகராட்சிகள் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளின் கட்டுப்பாட்டில் 840 குளங்கள் உள்ளன. இதில், புதுச்சேரி பகுதியில் மட்டும் நகராட்சிகளில் 59, கொம்யூன் பஞ்சாயத்துகளில் 394 என, மொத்தம் 453 குளங்கள் அமைந்துள்ளன.இவற்றில், 75 சதவீத குளங்கள் துார் வாரி பயன்படுத்தும் நிலையில் உள்ளன. 25 சதவீத குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு ஆவணங்களில் மட்டுமே உள்ளன.


முதல்கட்டமாக, 75 சதவீத குளங்களை துார் வாரி புனரமைக்கும் பணியை உள்ளாட்சித் துறை இயக்குனர் மலர்கண்ணன் தலைமையில் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.இதற்கிடையில், நீர்நிலைகளை துார் வாரி பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், மழை நீரை சேமிப்பது, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் கிராம சபை கூட்டங்களை நடத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.இதனடிப்படையில், வரும் 24ம் தேதியன்று, புதுச்சேரி, காரைக்காலில் அமைந்துள்ள 108 கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்களை நடத்துமாறு, அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து கமிஷனர்களுக்கும் உள்ளாட்சித் துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும், கிராம சபை கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X