புதுச்சேரி:நெட்டப்பாக்கம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில், தையல் கலை தொழில் நுட்பம், கம்ப்யூட்டர் பயிற்சி பிரிவில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இது குறித்து நெட்டப்பாக்கம் அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:நெட்டப்பாக்கம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில், தையல் கலை தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அன்ட் புரோகிராமிங் அசிஸ்டென்ட் பயிற்சி பிரிவில், சில இடங்கள் நிரப்பப்பட உள்ளது.அதன்படி, தையல் கலை தொழில்நுட்பப் பிரிவிற்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களும், கம்ப்யூட்டர் பயிற்சி பிரிவிற்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண், பெண் இருபாலரும் தகுதியானவர்கள். வயது தடையில்லை.புதுச்சேரியை சேர்ந்த தகுதி உள்ளவர்கள் வரும் 28ம் தேதி மாலை 4.00 மணிக்குள், அசல் சான்றிதழ்களுடன்நேரில் வந்து பயிற்சியில் சேரலாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.