பாகூர்:பாகூர் அருகே மதுக்கடையில் மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கரையாம்புத்துார் அடுத்த பனையடிக்குப்பத்தை சேர்ந்தவர் சந்துரு, 24; இவர் பாகூர் அடுத்த குருவிநத்தம் சித்தேரி அணைக்கப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மதுக்கடையில் கேஷியராக வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் பணியில் இருந்த போது, இருளஞ்சந்தை கிராமத்தை சேர்ந்த ராஜி தனது நண்பர்களுடன் சென்று மது குடித்து விட்டு, அதற்கான பணத்தை தராததோடு, மாமூல் கேட்டு தகராறு செய்து, அங்கிருந்த டேபுள், நாற்காலி உள்ளிட்ட பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.இது குறித்து புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்கு பதிந்து, ராஜி உள்ளிட்ட கும்பலை தேடி வருகின்றனர்.