மோதிலால் பாலிடெக்னிக்கில் காலணி பயிற்சி மையம் திறப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2019
02:00

புதுச்சேரி:மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுாரியில், மத்திய காலணி நிலையத்தின் புதுச்சேரிக்கான பயிற்சி நிலையம் துவக்கி வைக்கப்பட்டது.



புதுச்சேரியில் காலணி தயாரிப்பு சம்மந்தமான ஒரு பயிற்சி நிலையம் அமைத்திட அரசு முயற்சி மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து, சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் மத்திய காலணி பயிற்சி நிலையத்தின், விரிவாக்கம் செய்யப்பட்ட பயிற்சி நிலையம், லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல் லுாரியில் துவங்கப்பட்டுள்ளது.கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் பயிற்சி நிலையத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வளர்ச்சி ஆணையர் அன்பரசு, உயர்கல்வித்துறை இயக்குநர் ஓய்.எல்.ஆர். ரெட்டி, பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் பசுபதி, மத்திய காலணி மையத்தின் இயக்கநர் முரளி, உயர் கல்வித்துறை சிறப்பு பணி அலுவலர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த காலணி பயிற்சி நிலையத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய இரண்டு மாத கால பயிற்சி அளிக்கப்படுகிறது. காலணி தொடர்பாக அடிப்படை ஆபரேட்டர் பயிற்சியும், பொருட்கள் மற்றும் ஆடைகள் தொடர்பான அடிப்படை ஆபரேட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது. இதற்கு கல்வி தகுதி, வயது வரம்பு கிடையாது. ஒவ்வொரு பிரிவிலும் 60 மாணவர்கள் சேர்த்து கொள்ளப்பட உள்ளனர்.சென்னை மத்திய காலணி பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும், 8 குறுகிய கால பயிற்சியும், நெடுங்கால பயிற்சியும் மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுாரியில் விரைவில் துவக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X