ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் சந்தை கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் காலாவதியான உணவு பொருட்கள், லேபிள் குறைபாடுகள், நிறமேற்றப்பட்ட உணவு பொருட்கள், பிளாஸ்டிக் குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராம பாண்டியன் தலைமையில் உணவுபாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது லேபிள் குறைபாடுள்ள உணவு பொருட்கள் 50 கிலோ, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இலை மற்றும் 7 கிலோ பிளாஸ்டிக் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. உரிமம் இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கை விடப்பட்டது. ஆய்வின் போது ஆர்.எஸ்.மங்கலம் உணவு பாதுகாப்பு அலுவலர் கர்ணன், அலுவலர்கள் தர்மர், ஜெயராஜ், சரவணகுமார், முத்துசாமி, வீரமுத்து உட்பட பேரூராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.