ராமநாதபுரம் : பரமக்குடி கலையூர் பகுதியில் 10 கிளைகள் கொண்ட பனைமரம் வறட்சியால் வாடுகிறது.பரமக்குடி அருகே கலையூர் நத்தம் திடலில் பெரிய கண்மாய் உள்ளது.
இப்பகுதியில் 10 கிளைகளை கொண்ட பனைமரம் அதிசயத்தையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்திஉள்ளது. கற்பக தருவான பனை மரங்களின் அனைத்து பொருட்களும் பயன் தரும். கண்மாய் கரைப்பகுதியில் அதிகளவு பனை மரங்கள் நடவு செய்யப்படும். பனை மரம் இருந்தால் கண்மாய் கரைகள் பலப்படும். நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும்.தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியால் இந்த பனையில் 6 கிளைகள் மட்டும் இருந்தாலும், இதில் 4 கிளைகள் மட்டும் காய்ந்து போனது. மீதம் 6 கிளைகள் வறட்சியை தாங்கியுள்ளது. இந்த கிளைகளிலும் நுங்கு, உள்ளிட்ட பனைப்பொருட்கள் கிடைத்து வருகிறது. 10 கிளைகள் கொண்ட பனை மரத்தை அப்பகுதி மக்கள் பாதுகாத்து வருகின்றனர்.