| மண்டபம் வட்டார அளவிலான மகளிர் தடகளப் போட்டிகள் Dinamalar
மண்டபம் வட்டார அளவிலான மகளிர் தடகளப் போட்டிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஆக
2019
00:54

ராமநாதபுரம் : பனைக்குளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் விஜி போட்டிகளை துவக்கி வைத்தார். 14, 17, 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான தனித்தனி பிரிவுகளில் மாணவிகளுக்கு போட்டிகள் நடந்தது. 100 மீ., 200மீ., 400 மீ., 800 மீ., 1500 மீ., 3000 மீ., உள்ளிட்ட பிரிவுகளில் ஓட்டப் பந்தயம், 110 மீ., தடை தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடந்தது. இதில் வெற்றிபெறும் மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாடுவதற்கு தகுதி பெறுவார்கள்.




மண்டபம் கல்வி மாவட்டத்தில் 15 பள்ளிகளை சேர்ந்த 280 மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். இன்று மாணவிகளுக்கான தடகளப்போட்டிகள் நடக்கிறது. உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ்குமார், கண்ணதாசன் உள்ளிட்ட ஆசிரியர்கள் போட்டி நடுவர்களாக செயல்பட்டனர். ஏற்பாடுகளை பனைக்குளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செய்திருந்தது.100 மீ., ஓட்டம், 17 வயது பிரிவு: முதலிடம்- லாவண்யா ஸ்ரீ, புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, வேர்கோடு.இரண்டாமிடம்-பால சசிகலா, அரசு மேல்நிலைப்பள்ளி, தங்ச்சிமடம்.



மூன்றாமிடம்-அருள் சுகந்தி, செயின்ட் அன்னிஸ் மெட்ரிக்பள்ளி, அக்காள்மடம்.200 மீ., ஓட்டம்: முதலிடம்- லாவண்யா ஸ்ரீ, புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, வேர்கோடு. இரண்டாமிடம்- ஸ்வாதி, அரசு மேல்நிலைப்பள்ளி, ரெட்டையூரணி.மூன்றாமிடம்- ராஷிகா, அரசு மேல்நிலைப்பள்ளி, மண்டபம் முகாம்.400 மீ., ஓட்டம்: முதலிடம்- ராஜயோக தர்ஷினி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பனைக்குளம்.இரண்டாமிடம்- உமாபாரதி, அரசு மேல்நிலைப்பள்ளி, ரெட்டையூரணி. மூன்றாமிடம்- ஜெமில், அரசு மேல்நிலைப்பள்ளி, தங்கச்சிமடம்.800 மீ., ஓட்டம்: முதலிடம்- பவானி, புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, வேர்கோடு.இரண்டாமிடம்- கீர்த்திகா, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,பனைக்குளம். மூன்றாமிடம்- நிறைமதி, புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, வேர்கோடு.1500 மீ.,




ஓட்டம்: முதலிடம்- தர்ஷினி, அரசு மேல்நிலைப்பள்ளி, மண்டபம் முகாம்.இரண்டாமிடம்- மரியா ரிகன்ஷா, ஹோலி கிராஸ் அரசு மேல்நிலைப்பள்ளி, தங்கச்சிமடம்மூன்றாமிடம்- நிரோஷினி, அரசு மேல்நிலைப்பள்ளி, தங்கச்சிமடம்.3000 மீ., ஓட்டம்: முதலிடம்-பிரியதர்ஷினி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பனைக்குளம்.இரண்டாமிடம்- சதிஸ்வரி, புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, வேர்கோடு.மூன்றாமிடம்-நம்பு முனீஸ்வரி, புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, வேர்கோடு.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X