| ராஜ்யபுரஸ்கார்விருதுக்கான தேர்வு முகாம் Dinamalar
ராஜ்யபுரஸ்கார்விருதுக்கான தேர்வு முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஆக
2019
00:55

பரமக்குடி : தமிழ்நாடு பாரத சாரணர் இயக்கம் சார்பில் ராஜ்யபுரஸ்கார்விருதுக்கான தேர்வு முகாம் பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது.




மூன்று நாட்கள் நடந்த முகாமை பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் கருணாநிதி துவக்கி வைத்தார். மாவட்ட சாரண ஆணையர் சேதுராமு, தலைமையாசிரியர் ஜஸ்டின் ஞானசேகர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சாரணர் அமைப்பு செயலாளர் கணபதி வரவேற்றார். முகாமில் பரமக்குடி கல்வி மாவட்டத்தை சேர்ந்த 131 மாணவர்கள் பங்கேற்றனர். மாநில சாரண பயிற்றுநர்கள் சங்கிலிக்காளை, சிவக்குமார், ரூத்பேபி விருதுக்கான மாணவர்களை தேர்வு செய்தனர். சாரண ஆசிரியர்கள் அலி அக்பர், சரவணக்குமார், ஜெகன், பிரகாஷ், நளினி, மரியஆக்னஸ், ஜெயமேரி கலந்து கொண்டனர். சத்தியசீலன் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X