பரமக்குடி : பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் 28.நேற்று முன்தினம் இரவு மணிகண்டன், அவரது மனைவியுடன் வீட்டில்துாங்கினார்.
அப்போது வீட்டின் ஓடுகளை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் பீரோவில் இருந்தஆறேகால்பவுன் தங்க நகைகள், வெள்ளிக் கொலுசு மற்றும் 35ஆயிரம் ரூபாய் பணத்தைகொள்ளையடித்தனர். பின்னர்வீட்டின் முன்பக்க கதவை திறந்த கொள்ளையர்கள் வெளியேறினர்.அப்போது வீட்டில் ஆழ்ந்ததுாக்கத்தில் இருந்த மணிகண்டன் தம்பதியினரை வீட்டிற்குள் வைத்து வெளியே பூட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
நகை மற்றும் பணத்தின் மதிப்பு 1 லட்சத்து 34 ஆயிரத்தி 750 ரூபாய். மணிகண்டன் புகாரில், பரமக்குடி டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.