| சிவகங்கையில் ரூ.1 கோடியில் ஆசிரியர் கூட்டரங்கு Dinamalar
சிவகங்கையில் ரூ.1 கோடியில் ஆசிரியர் கூட்டரங்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஆக
2019
01:18

சிவகங்கை, : சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.1 கோடி திட்டத்தில் கட்ட உள்ள ஆசிரியர் கூட்டரங்கை மாணவர் நலன் கருதி, மாற்று இடத்தில் கட்ட கலெக்டர் ஜெயகாந்தன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.




இப்பள்ளி வளாகத்தில் அரசு தொடக்க பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரை இயங்குகிறது. பள்ளிக்கு ஒதுக்கிய இடத்திலேயே ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட கூடுதல் சி.இ.ஓ., அலுவலகம், வட்டார வள மேற்பார்வையாளர் அலுவலகம், புத்தகம் வைக்கும் அறைகள் என ஏராளமான கட்டடங்கள் உள்ளன. பயிற்சிக்கு வரும் ஆசிரியர்களின் வாகனங்கள் நிறுத்த இடமின்றி, மாணவர்களின் விளையாட்டு அரங்கில் தற்போது நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. இங்கு அடிக்கடி பயிற்சி நடப்பதால், மாணவர்கள் படிக்கும் போது கவன சிதறல் ஏற்படுகிறது.ரூ.1 கோடியில் ஆசிரியர் கூட்டரங்குஇந்நிலையில் மீண்டும் இப்பள்ளி வளாகத்திலேயே நமக்கு நாமே திட்டத்தில் கலெக்டர் நிதி ரூ.69 லட்சம், கல்வி அலுவலக பங்களிப்பு தொகை 31 லட்சம் என ரூ.1 கோடி நிதியில் மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கான கூட்ட அரங்கு கட்ட நிதி ஒதுக்கியுள்ளனர்.




மாவட்டஅளவில் இருந்து வரும் ஆசிரியர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடத்த, கூட்டரங்கு கட்டும் கலெக்டரின் திட்டத்தை மாணவர்கள், பெற்றோர்கள் வரவேற்கின்றனர். அதே நேரத்தில் ஏற்கனவே பல கட்டடங்கள் உள்ளதால், மாணவர்கள் படிப்பில் கவனச்சிதறல் ஏற்பட்டு வரும் நிலையில், இங்கு கூட்டரங்கு கட்டி ஒலிபெருக்கியை வைத்து கூட்டம் நடத்தும் போது, மேலும் மாணவர்கள் பாதிக்கப்பட கூடும்.மாற்று இடம் தேர்வு அவசியம்.




தற்போது மின்வாரிய அலுவலகம் பின் உள்ள அரசு ஐ.டி.ஐ., கட்டட வளாகம், எம்.எல்.ஏ., மற்றும் எல்.ஐ.சி., அலுவலகத்திற்கு பின் உள்ள அரசு காலியிடங்களில் ஆசிரியர்களுக்கான கூட்ட அரங்கை கட்டினால், மாணவர்கள் கல்வி கற்பதில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும். இதற்கென தனியாக இடம் தேர்வு செய்து அங்கு கூட்டரங்கு கட்ட கலெக்டர் ஜெயகாந்தன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X