| தாலுகா அலுவலக நிறுத்தத்தில் நிற்காத பஸ்கள் தவியாய் தவிக்கும் சிங்கம்புணரி பொது மக்கள் Dinamalar
தாலுகா அலுவலக நிறுத்தத்தில் நிற்காத பஸ்கள் தவியாய் தவிக்கும் சிங்கம்புணரி பொது மக்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஆக
2019
01:19

சிங்கம்புணரி : சிங்கம்புணரி, எஸ்.புதுார் மக்கள் கோரிக்கையை அடுத்து செப்டம்பர் 2016ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிங்கம்புணரி தாலுகா உருவாக்கப்படும் என அறிவித்து அரசாணை வெளியிட்டார்.




சிங்கம்புணரி நகர் மண்டபம் தாலுகா அலுவலகத்துக்கு தற்காலிக இடமாக தேர்வு செய்யப்பட்டு 2017 மே மாதம் முதல் தனி தாலுகாவாக செயல்பட்டு வந்தது.அணைக்கரைப்பட்டி ஊராட்சி முத்துவடுகநாத சுவாமி நகரில் தாலுகா அலுவலகத்திற்கு இடம் தேர்வு செய்து கட்டடப்பணிகள் முடிந்த நிலையில் கடந்த ஜூனில் முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் புதிய தாலுகா அலுவலகத்தை திறந்து வைத்தார்.புதிய தாலுகா அலுவலகம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ., துாரமுள்ளது.




இதனால் அலுவலகத்திற்கு செல்லும் மக்கள் பெரும்பாலும் பஸ்சையே நம்பி உள்ளனர். தாலுகா அலுவலகத்தின் அருகே ஏற்கனவே ஒரு சில டவுன் பஸ்கள் நின்று செல்லும் வழக்கம் இருந்தது.தற்பொழுது புதிய அலுவலகம் செயல்பாட்டுக்கு வந்த பின்னர் பேருந்துகள் அந்நிறுத்தத்தில் நிற்பதை தவிர்ப்பதால் பொதுமக்களும், அலுவலர்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஆட்டோவில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X