20 வருடங்களாக துாரெடுக்கப்படாத கால்வாய் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2019
01:35

திருப்புவனம் : திருப்புவனத்தில் கடந்த 20 வருடங்களாக துார் வாரப்படாத கால்வாயில் சாக்கடை நீர் தேங்கி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றன.




வைகை ஆற்றில் இருந்து வலது மற்றும் இடது பிரதான கால்வாய் மூலம் திருப்புவனம் வட்டார கண்மாய்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் அருப்புக்கோட்டை கூட்டு குடிநீர் பம்பிங்செய்யும் இடம் அருகே பிரியும் வலது பிரதான கால்வாயில் இருந்து வலையனேந்தல் கண்மாய்க்கு 5 கி.மீ., துாரமுள்ள கால்வாயும் அடக்கம்.இக்கால்வாய் திருப்புவனம் சேதுபதி நகர் வழியாக வலையனேந்தல் கண்மாய்க்கு செல்கிறது. சமீபத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி இக்கால்வாயின் ஒரு பகுதி மட்டும் துார் வாரப்பட்டது.




மற்றொரு பகுதி துார் வாரப்படவில்லை. சேதுபதி நகர் வழியாக சுமார் ஒரு கி.மீ., துாரம் கால்வாய் துார் வாரப்படாததால் கடந்த 20 வருடங்களாக இந்த இடத்தில் சாக்கடை நிரந்தரமாக தேங்கியுள்ளது.பிளாஸ்டிக் கழிவுகள், இறைச்சி கழிவு உள்ளிட்டவை நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது. நிலத்தடி நீர் மிகவும் மாசுபட்டுள்ளது. ஆழ்துளை கிணறுகளில் தண்ணீரின் நிறம் மாறியதுடன் துர்நாற்றம் வீசுவதால் இப்பகுதியில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.இப்பகுதியில் வசிப்பவர்கள் கூறியதாவது: வீடுகளில் கதவை திறக்க முடியவில்லை, எப்போதும் மூடியே வைத்துள்ளோம், பகலில் ஈக்கள் தொந்தரவு, இரவில் கொசுக்கள் படையெடுப்பு என 24 மணி நேரமும் பாதிக்கப்பட்டு வருகிறோம்.




சாக்கடை நீர் நிரந்தரமாக வெளியேற வழியின்றி தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. பேரூராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைவரிடமும் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆழ்துளை கிணற்றில் வரும் தண்ணீர் கூட நிறம் மாறி வருகிறது. எனவே பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகிறோம் என்றனர். மாவட்ட நிர்வாகம் வலையனேந்தல் கால்வாயை முழுவதுமாக துார் வாரி சாக்கடை நீர் தேங்காவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X