| மாநில ஜூடோ போட்டிகளில் வெற்றி உத்தமபாளையம் மாணவர்கள் சாதனை Dinamalar
மாநில ஜூடோ போட்டிகளில் வெற்றி உத்தமபாளையம் மாணவர்கள் சாதனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஆக
2019
02:30

உத்தமபாளையம் : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற மாநில ஜூடோ போட்டிகளில், உத்தமபாளையம் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.




பரமக்குடியில் மாநில அளவிலான ஜூனியர், சப் ஜூனியர் ஜூடோ போட்டிகள் ஆர்யவைஸ்ய மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. தமிழ்நாடு ஜூடோ விளையாட்டு கழகம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு கழகம் இணைந்து இருநாட்கள் நடத்திய போட்டிகளில் தமிழகம் முழுவதும் இருந்து 700க் கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தேனி மாவட்டத்திலிருந்து 29 பேர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு ஜூடோ அசோசியேசன் மாநில தலைவர்விஜயமோகனமுரளி துவக்கி வைத்தார்.



எடை மற்றும் வயது பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் சிஷ்ய அகடாமி மாணவி திவிக்ஸ்ஷாஸ்ரீ தங்கப்பதக்கம் பெற்றார். ராயப்பன்பட்டி ஆக்னஸ் மேல்நிலைப்பள்ளி 9 ம் வகுப்பு மாணவி சத்யபிரியா வெள்ளி பதக்கம் பெற்றார். குள்ளப்பகவுண்டன்பட்டி மகரிஷி வித்யாமந்திர் பள்ளி 5 ம் வகுப்பு மாணவர் யோகித்சர்மா, ஆர்.ஆர். பள்ளி மாணவர் ேஷமந்த்சச்சின், ஆக்னஸ் பள்ளி மாணவி சுருதி, சிஷ்ய அகாடமி மாணவர் கர்ஷன் ஆகியோர் வெண்கலப் பதக்கம் பெற்றனர்.




வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை தேனி மாவட்ட ஜூடோ சங்க செயலாளர் முரளி, உதவி பயிற்சியாளர் செல்லப்பாண்டியன் , பள்ளி ஆசிரியர்கள் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X