ஏலத்தோட்டங்களில் சரம் திருட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2019
02:31

கம்பம் : இடுக்கி மாவட்டத்தில் ஏலத்தோட்டங்களில் செடிகளில் உள்ள சரத்தை மர்மநபர்கள் அறுத்து செல்கின்றனர்.




ஏற்கனவே மகசூல்பாதிப்பில் உள்ள விவசாயிகள் இந்த திருட்டால் தவிக்கின்றனர்.கேரளா, இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் சாகுபடி பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இங்குள்ள அந்நியார்தொழு, புளியன்மலை, இஞ்சிப்பிடிப்பு, கல் தொட்டி, மாதவன்கானல், மேட்டுக்குழி, மேப்பாறை, சுல்தானியா, மாலி, சாஸ்தாநடை, வண்டன்மேடு, கட்டப்பணைஉள்ளிட்ட பல பகுதிகளில் கேரளா, கம்பம் பள்ளத்தாக்கை சேர்ந்தவர்களும் சாகுபடி செய்கின்றனர். சீதோஷ்ண நிலை மாற்றத்தால், இந்தாண்டு கடுமையான மகசூல் பாதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் சீசன் கூட இன்னமும் ஆரம்பிக்கவில்லை.




இந்நிலையில் ஏலக்காய் விலை கூடுதலாக கிடைத்து வருகிறது. அதனால் ஏலத் தோட்டங்களில் திருட்டு சம்பவங்கள் ஆரம்பமாகியுள்ளது.அதிர்ச்சி: ஏலச்செடிகளில் பறிக்கும் நிலையில் உள்ள ஏலப்பழங்கள் அடங்கிய சரத்தை அப்படியே அறுத்து செல்கின்றனர். ஏற்கெனவே மகசூல் குறைவு. கிடைத்து வந்த விலையில் சரிவுபோன்றவற்றால் கவலையில் உள்ள ஏல விவசாயிகளுக்கு, இந்த திருட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



நேற்று முன்தினம் புளியன்மலை, நேற்று அந்நியார்தொழுவில் கம்பத்தை சேர்ந்தவரின் தோட்டத்தில் சரத்திருட்டு நடைபெற்றுள்ளது. கம்பம் விவசாயி , கம்பமெட்டு போலீசில் புகார் செய்துள்ளார்.முன்னோடி ஏல விவசாயி காந்தவாசன் கூறுகையில், ' 'இதுவரை கேள்விப்படாத வகையில் செடியில் உள்ள காய்சரத்தை அறுத்து செல்கின்றனர். இதனால் ஏல விவசாயிகள் கடும் பாதிப்பிற்குள்ளாவார்கள் என்றார்.



இதையடுத்து ஏலத்தோட்டங்களில் இரவு நேர காவல் பணிக்கு ஆட்களை நியமிக்கும் பணியில்விவசாயிகள் இறங்கியுள்ளனர். சிலர் அங்கு குறிப்பிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கும் நடவடிக்கைகளை துவக்கியுள்ளனர்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X