| குடிநீர் பிரச்னை: பொதுமக்கள் மறியல் Dinamalar
குடிநீர் பிரச்னை: பொதுமக்கள் மறியல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஆக
2019
02:33

ஆண்டிபட்டி : புள்ளிமான்கோம்பை ஊராட்சி தர்மத்துபட்டியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ரோட்டில் மறியல் செய்தனர்.இக்கிராமத்தில் ஆயிரத்து ஐநுாறுக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.




ஆண்டிபட்டி -- சேடபட்டி கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் உள்ளது. கடந்த 6 மாதத்திற்கும் மேலாக குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். 'போர்வெல்' மூலம் வினியோகம் செய்யப்படும் தண்ணீரையே குடிநீர் உள்பட அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்த வேண்டி உள்ளது. குடிநீருக்காக அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று வரும் நிலை தொடர்கிறது. தர்மத்துபட்டி கிராமத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கும்படி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியும் நடவடிக்கை இல்லை.




இதனால் ஆத்திரமடைந்த அந்த கிராமத்தை சேர்ந்த இருநுாறுக்கும் மேற்பட்டவர்கள் ஆண்டிபட்டி- - வத்தலக்குண்டு ரோட்டில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். ஆண்டிபட்டி ஒன்றிய அதிகாரிகள் , போலீசார் பேசி, ஒரு வாரத்திற்குள் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து மறியல் முடிவுக்கு வந்தது. இதனால் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிப்படைந் தது. வருஷநாடு: கடமலை-- மயிலை ஒன்றியம் கடமலைக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட தென் பழனி கிராமத்தில் 1000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்.




இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் வைகை ஆற்றில் உறை கிணறு அமைத்து குடிநீர் சப்ளை செய்கிறது. குடிநீர் மோட்டார் பழுதடைந்து விட்டதால் நான்கு நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 40க்கும் மேற்பட்டோர், குடிநீர் வசதி கேட்டு வருஷநாடு- - கடமலைக்குண்டு மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். ஏ.பி.டி.ஓ., கருப்பசாமி, இன்ஸ்பெக்டர் முருகன் பேசினர். குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் கலைந்து சென்றனர். 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X