| அடிப்படை வசதிகள் 'ஆப்சென்ட்' லட்சுமி நகர் மக்்கள் அவதி Dinamalar
அடிப்படை வசதிகள் 'ஆப்சென்ட்' லட்சுமி நகர் மக்்கள் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஆக
2019
02:34

சின்னமனுார் : சின்னமனுார் லட்சுமி நகர் நகராட்சி நிர்வாகத்தால் புறக்கணிக்கப்படுவதால் அடிப்படை வசதியின்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.




மார்க்கையன்கோட்டை ரோட்டில் லட்சுமி நகர் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு நகராட்சி சார்பில் ரோடு வசதி ஏற்படுத்தப்பட்டது. அடிப்படை தேவைகளான குடிநீர், தெருவிளக்கு வசதி ஏற்படுத்தப்படவில்லை.மக்கள் கூறுகையில், 'வீட்டு வரி விதிப்பில் மார்க்கையன்கோட்டை ரோட்டை ஒட்டி அமைந்துள்ள பகுதிக்கு 'ஏ' கிரோடு அந்தஸ்த்தும், மற்ற பகுதிகளுக்கு 'டி' கிரேடும் கொடுக்கப்பட்டுள்ளது. நகராட்சிக்கு ஆண்டுக்கு பல லட்ச ரூபாய் இப்பகுதியில் வீட்டு வரி வசூலாகிறது. ஆனாலும் குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதி செய்து கொடுக்கப்படவில்லை.




நேரடியாக வீடுகளில் குப்பை சேகரிக்கும் திட்டமும் அமல்படுத்தப்படவில்லை. பாதாள சாக்கடை, கூட்டு குடிநீர், தெருவிளக்கு வசதி ஏற்படுத்த நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X