| மழைநீர் சேமிப்பு மக்கள் இயக்கமாக மாற வேண்டும் Dinamalar
மழைநீர் சேமிப்பு மக்கள் இயக்கமாக மாற வேண்டும்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஆக
2019
02:37

தேனி : தேனியில் தினமலர் நாளிதழ், நலம் மருத்துவமனை இணைந்து மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடத்தியது.
இதில் சிறுவர் முதல் முதியவர் வரை ஆர்வமாக 156 பேர் பங்கேற்று 'மழைநீர் உயிர் நீர்' என்பதை வலியுறுத்தி ஓவியங்கள் வரைந்தனர். இவற்றை நடுவர் குழுவினர் தேர்வு செய்தனர். இதன் பரிசளிப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று மாலை தேனி வெஸ்டர்ன் கேட் ஓட்டலில் நடந்தது. நலம் மருத்துவமனை சேர்மன் பழனியப்பன் வரவேற்றார்.200 கண்மாய்கள் சீரைமக்கப்படும்தலைமை வகித்து தேனி ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் கவிதா பேசியதாவது: தமிழகத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தண்ணீர் சட்டம், தண்ணீர் தர்மம் இருந்தது.
முன்னர் அளவான மக்கள் தொகை, குறைந்த தொழிற்சாலைகள் இருந்தன. தற்போது மக்கள் பெருக்கம் அதிகமானதால் பூமியில் இருந்து அதிக நீர் சுரண்டப்படுகிறது. மழை பொழிவில் 40முதல் 50 சதவீதம் கடல் நீராகிறது. 35 சதவீதம் நீராவியாகிறது. 15 சதவீத நீரைதான் குடிநீராகவும், தொழிற்சாலைகளும் பயன்படுத்துகிறோம். அடிக்கடி தண்ணீர் பிரச்னை ஏற்படுகிறது. இதனை தீர்க்க 'ஜல் சக்தி அபியான்' என மத்திய அரசு தனி அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட அதிக நீரை உறிஞ்சுவதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
இது வருத்தமான தகவல். தேனி மாவட்டத்தில் 900 பண்ணை குட்டைகள் , 900 தடுப்பணைகள் அமைக்கப்படுகின்றன. வறண்ட 675 ஆழ்துளை குழாய்கள் மழைநீர் சேகரிப்பு செய்யப்பட்டுள்ளன. ஒரு ஆழ்துளை குழாயில் மழைநீர் சேமிப்பு செய்தால் அதை சுற்றியுள்ள 25 கிணறுகளுக்கு நீர் மட்டம் உயரும். மற்ற மாவட்டங்களோடு ஒப்பிடும் போது தேனியில் பெரியளவில் தண்ணீர் பஞ்சம் இல்லை.100 ஏக்கர் பரப்பிலான 30 கண்மாய்கள் குடிமராமத்து பணி நடக்கிறது. இன்னும் 20 நாட்களில் 200 கண்மாய்கள் சீரமைக்கப்படும். இப் பணியில் மக்கள் பங்களிப்புடன், தொண்டு நிறுவனங்கள் ஈடுபட வேண்டும். வீடுகளில் பயன்படுத்தும் நீரை மறுசுழற்சி செய்தால் 50 சதவீத நீர் பாதுகாக்கப்படும்.மண், மழை, மரம் ஆகியவற்றை பாதுகாப்பது மனிதனின் கடமை. ஒவ்வொரு வீடுகளிலும் மழைநீர் சேமிப்பு அவசியம், இது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் , என்றார். குடிநீர் கிடைக்கும்தேனி நகராட்சி கமிஷனர்(பொறுப்பு) ராஜாராம்: மழைநீர் சேமிப்பு என்பதைவிட குடிநீர் சேமிப்பு எனலாம். உலக அளவில் 2 சதவீதம்தான் நல்ல நீர் உள்ளது. கிராமங்களில் கிணறுகளில் வாளியில் நீரை சேகரித்தனர். அது 80 சதவீதம் சுத்தமாக கிடைத்தது. இன்று நாம் பயன்படுத்தும் ரசாயனங்களால் குடிநீர் மாசுபட்டுள்ளது.
பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நீரில் அசுத்தம் அதிகமாகி வருகிறது. மழைநீர் எல்லோரும் சேமிக்க முடியும். அதனால் வீடுகளில் ஆழ்துளை குழாய்கள், கிணறுகளில் உள்ள உவர்ப்பு நீர் தன்மை மாறும். மழைநீர் செல்ல செல்ல குடிநீராக மாறும். அன்று பணத்தை தண்ணீராய் இரைக்கின்றாய் என்பார்கள். இன்று தண்ணீரை பணம் செலவு செய்து பெற வேண்டியுள்ளது. மழைநீர் சேகரிப்பில் நகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது. மரம் வளர்த்தால் எதிர்காலத்தில் பயன்கிடைக்கும். ஒரு மரம் பல நுாறு ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தேவையான ஆக்சிஜனை தருகிறது. மரம் வளர்ந்து மழை பெறுவோம். தவறான புரிதல்:

தேனி மாவட்ட வன அலுவலர் கவுதம்: மழைநீர் கடலில் கலந்து வீணாகிறது என்ற தவறான புரிதல் மக்களிடம் உள்ளது. இதனை விரையம் என்பது தவறு. கடல்நீர் குறிப்பிட்ட உப்பு தன்மையில் இருக்க வேண்டும். அதில் மாறுபட்டால் வெப்பநிலை மாறும், மழை குறையும் அல்லது அதிகம் பெய்யும். மழைநீர் குறிப்பிட்ட சதவீதம் கடலில் கலக்க வேண்டும். தற்போது பூமியின் பயன்பாடு மாறியதால் மண் தரைகள் கான்கிரீட் தரைகளாக மாறிவிட்டது. அதனால் பெய்யும் மழை பூமியில் உள்ளிழுப்பு தன்மை குறை கிறது. அதிக கட்டடங்கள் உருவாகி விட்டதால் மழைநீர் உள்வாங்கும் தன்மை குறைந்துள்ளது. மழைநீரை சேமித்து பூமிக்குள் அனுப்பவேண்டும். நல்ல வீடு கட்டி வாழ்வதை போல் அதிகளவு நீர் பூமிக்குள் செலுத்த வேண்டும். நாம் அடையும் பலனுக்கு பூமிக்கு நாம் செய்யும் காரியம் குறைவு. எதிர்மறையான சிந்தனைகளை தவிர்த்து மழைநீர் அவசியம் என்பதை மக்கள் உணர வேண்டும். இன்னும் மூன்று மாதங்களில் அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேமிப்பு கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது. அதனை உணர்ந்து நாம் மழைநீர் சேமிப்பு உருவாக்க வேண்டும், என்றார்.மேகமலை வன சரணாலய காப்பாளர் சச்சின் போஸ்லே துக்கராம் , நகராட்சி சுகாதார ஆய்வாளர் அறிவுச்செல்வம் ஆகியோர் பங்கேற் றனர். நிகழ்ச்சியை நலம் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜ்குமார் ஒருங்கிணைத்தார். பாலசங்கா மில்ஸ் இயக்குனர் கதிரேசன் நன்றி கூறினார்.பாக்ஸ்

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X