நத்தம் : நத்தம் என்.பி.ஆர்., பொறியியல் கல்லுாரியில் கணிப்பொறி அறிவியல் துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது.கல்வி குழும செயல் இயக்குனர் ஷ்யாம் உமா சங்கர் தலைமை வகித்தார். பொறுப்பு முதல்வர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். மாணவர் ஸ்ரீதர் வரவேற்றார். சென்னை காக்னிசன்ட் டெக்னாலஜி நிறுவனத்தைச் சேர்ந்த அசோசியேட் டெவலப்பர் பிரசன்ன விஜயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கட்டமைப்பு முறைகள், ஜாவா ஸ்கிரிப்ட், வெப் டிசைனிங்கிற்கு தேவைப்படும் கருவிகள் குறித்து விளக்கினார். மாணவி பிரீத்தா நன்றி கூறினார். பேராசிரியர் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.