| கேபிள் ஒப்பந்த தொழிலாளி பலி Dinamalar
கேபிள் ஒப்பந்த தொழிலாளி பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஆக
2019
06:17

பட்டிவீரன்பட்டி : ட்டிவீரன்பட்டி அருகே அரசு கேபிள் ஒப்பந்த தொழிலாளி உயர் அழுத்த மின்கம்பி உரசியதில் பலியானார்.



நாகர்கோயிலைச் சேர்ந்தவர் பொன்ஜோதி, 27. திருமணமானவர். நிலக்கோட்டையில் குடும்பத்துடன் வசித்தார். நேற்று காலை சித்தரேவு ரோட்டில் கண்ணாடி இழை ஒயரில் இருந்த துண்டிப்பை சரி செய்து கேபிள் கம்பத்தில் துாக்கி மாட்டினார். அப்போது தவறுதலாக அருகில் இருந்த உயர் அழுத்த மின் கம்பியில் கைஉரசியதில் பொன்ஜோதியின் உடலில் மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வத்தலக்குண்டு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X