| குடிநீரின்றி பயணிகள் அவதி Dinamalar
குடிநீரின்றி பயணிகள் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஆக
2019
06:17

பழநி : பழநி பஸ் ஸ்டாண்டில் போதிய குடிநீர் வசதி இல்லாததால் வெளியூர் பயணிகள், பக்தர்கள் சிரமப்படுகின்றனர். பழநி முருகன் கோயிலுக்கு தினமும் ஏராளமான வெளியூர், உள்ளூர் பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அடிப்படை வசதியான குடிநீர் வசதி பெயரளவில் உள்ளது. குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் அம்மா குடிநீர் நிலையம் பல மாதங்களாக செயல்படாமல் பூட்டிக்கிடக்கிறது. கடைகளில் தரமில்லாத தண்ணீர் பாக்கெட் மற்றும் பாட்டில்கள், குளிர்பானங்கள் அடக்கவிலையை காட்டிலும் ரூ.5 முதல் ரூ. 15 வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.ஆகையால் பழநி பழைய, புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அம்மா குடிநீர் விற்பனை செய்ய வேண்டும். நகராட்சி நிர்வாகம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க முன்வர வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X