சிதம்பரம் கைது: கடலுாரில் காங்., ஆர்ப்பாட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2019
23:31

கடலுார்:முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கைது செய்யப்பட்டத்தை கண்டித்து, கடலுார் காங்.,சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


பாரதி ரோடு கார் ஸ்டேண்ட் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார் தலைமை தாங்கினார். சாந்திராஜ், கிருஷ்ணமூர்த்தி, திலகர், குள்ளபிள்ளை,முருகன்,சீத்தாராமன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட துணைத்தலைவர் ரங்கமணி வரவேற்றார். மாவட்ட பொதுச்செயலர்கள் ரவிக்குமார், கிேஷார்குமார், காமராஜ், முருகன், செல்வக்குமார், பார்தீபன், ரமேஷ், ராஜவேல், மணி, மணிகண்டன் கலந்து கொண்டனர். வேப்பூர் வேப்பூர் கூட்டுரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, காங்., தெற்கு மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் வேதமாணிக்கம், ராஜிவ்காந்தி, செயற்குழு உறுப்பினர் கலியபெருமாள் முன்னிலை வகித்தனர்.நல்லூர் வட்டார தலைவர் ராயப்பிள்ளை வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் செந்தில் முருகன், பொது செயலர் துரைசாமி பங்கேற்றனர்.புவனகிரி புவனகிரி ராஜிவ் சிலை அருகில், ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னாள் சேர்மன் பழனிச்சாமி தலைமை தாங்கினார். நகர தலைவர் கண்ணன், கீரப்பாளையம் வட்டார தலைவர் செழியன், பழனிவேல், கிருஷ்ணன் ராம்குமார், வினாயகம் முன்னிலை வகித்தனர். பேச்சாளர் மோகன்தாஸ், மாவட்ட விவசாய சங்கத் தலைவர் குமார், மாவட்ட துணைத் தலைவர் அன்பு, சண்முகம், அன்பழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.திட்டக்குடிஅன்பரசு தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சரவணன், மனோகரன், சக்திவேல், ராமலிங்கம், முருகேசன், விஜயகுமார், பெண்ணாடம் கந்தசாமி, ஐ.என்.டி.யூ.சி.,ராமலிங்கம், சீனிவாசன், செல்வமணி கந்தசாமி, முத்துலட்சுமி பூமாலை பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் முடிந்த பின்பு நிர்வாகிகள் அனைவரும் சென்றுவிட்டனர். அதன்பின் போலீசார், வீட்டிற்கு சென்ற காங்கிரஸ் பிரமுகர்களை போன் செய்து வரவழைத்து கைது செய்வதாக தெரிவித்தனர்.திட்டக்குடி அன்பரசு, மனோகரன், சக்திவேல், ராமலிங்கம், முருகேசன், விஜயகுமார், கொளஞ்சி, பூமாலை, முத்துலட்சுமி, பழனிசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் சிதம்பரம் நகர காங்., சார்பில் கண்டன மறியல் போராட்டம் கஞ்சித்தொட்டி சந்திப்பில் நேற்று நடந்தது. நகர தலைவர் பாலதண்டாயுதபாணி தலைமை தாங்கினார். இதனால் 10 நிமிடம் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டவுன் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் மாநில துணை தலைவர் செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் சித்தார்த்தன், சத்தியமூர்த்தி, விஸ்வநாதன், முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், புவனகிரி அன்பரசன், சகஜானந்தம் உள்ளிட்ட 26க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.ஸ்ரீமுஷ்ணம்மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.வட்டார தலைவர்கள் தமிழ்வாணன், வைத்தியநாதசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் சுப்பு ரவி வரவேற்றார். மாவட்ட செயலர்கள் பாலையா, ரவி, சீனுவாசன், மாவட்ட துணை செயலர்கள் செல்வராஜ், புகழேந்தி, ஒன்றிய பொருளாளர் குணசேகரன்,நகர செயலர் கந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X