| கர்நாடக வனத்துறை அதிகாரிகளுக்கு முதுமலையில் சிறப்பு பயிற்சி Dinamalar
கர்நாடக வனத்துறை அதிகாரிகளுக்கு முதுமலையில் சிறப்பு பயிற்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஆக
2019
23:39

கூடலுார்:புலிகள் காப்பகங்களில் களை செடிகளை அகற்றுவது குறித்து, கர்நாடக வன அதிகாரிகளுக்கு முதுமலையில் சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.கர்நாடக மாநிலத்திலுள்ள பந்திப்பூர், நாகர்ஹோலா, பத்தா, காளி, பிலிகிரி ரங்கநாதர் டெம்பல் புலிகள் காப்பகங்களில் களை செடிகளால் வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.


செடிகளை அகற்றி, வனத்தை பசுமை காடுகளாக மாற்றுவது குறித்து, கர்நாடகா புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகளுக்கு, முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு வன மேலாண்மை பயிற்சி மையத்தில் சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.கர்நாடகா தலைமை வன உயிரின பாதுகாவலர் சஞ்சய் மோகன் தலைமை வகித்து, 'களை செடிகளை அகற்றுவதன் அவசியம்,' குறித்து விளக்கினார். டில்லி பல்கலைக்கழக பேராசிரியர் பாபு, 'அறிவியல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி களை செடிகளை வேருடன் அகற்றி, அப்பகுதிகளில் வனவிலங்குகள் விரும்பி உண்ணும் புற்கள், தாவரங்களை உற்பத்தி செய்வதும் முறைகள் குறித்து,' விளக்கினார்.


முகாமில், கர்நாடகா மாநில கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர்கள் சுபாஷ், ரங்கராவ், ஜகத்ராம், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல், துணை இயக்குனர்கள் செண்பகபிரியா, ஸ்ரீகாந்த் மற்றும் கர்நாடகா புலிகள் காப்பகங்களில் கள இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் வனச்சரகர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, முதுமலை வனச்சரகர்கள் தயானந்தன், சிவக்குமார், ராஜேந்திரன், சிவக்குமார் விஜய் ஆகியோர் செய்தனர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X