| சிதம்பரத்தில் ரவுடி கொலை ஏழு பேர் கைது Dinamalar
சிதம்பரத்தில் ரவுடி கொலை ஏழு பேர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஆக
2019
23:43

விருத்தாசலம்:சிதம்பரத்தில் வெடிகுண்டு வீசி ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில், விருத்தாசலத்தை சேர்ந்த ஏழு ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.



சிதம்பரத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் ரவுடி கோழிபாண்டியன் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார்.இதையடுத்து, விருத்தாசலம் ஏ.எஸ்.பி., தீபா சத்தியன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீத் மற்றும் போலீசார் ரவுடிகளை தேடி வந்தனர்.இவ் வழக்கில் தொடர்புடைய விருத்தாசலத்தை சேர்ந்த கோட்டான் என்கிற ராஜசேகர்,28; பூண்டி என்கிற குழந்தைவேலு,38; சூரி என்கிற சூரிய பிரகாஷ்,28; வேலு என்கிற டயர் வண்டி வேலு,33; கார்த்திக் என்கிற கார்த்திகேயன்,27; குப்பநத்தம் செல்லக்கண்ணு மகன் அய்யாசாமி,28; ஜெயங்கொண்டம் சுபாஷ்,36 ஆகிய ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X