| அனல் மின் நிலையத்திற்கு கடலில் பாலம் Dinamalar
அனல் மின் நிலையத்திற்கு கடலில் பாலம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஆக
2019
23:57

ராமநாதபுரம் : உப்பூர் அனல் மின் நிலையத்தில் 800 மெகாவாட் கொண்ட இரு அலகுகள் அமைக்கும் பணிகளை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்து வருகிறது. அனல் மின் நிலையத்திற்கு தேவயான நீரை கடலில் இருந்து எடுப்பதற்காக கடலுக்குள் 5 கி.மீ.,க்கு பாலம் அமைத்து குழாய்கள் அமைக்கும் பணியும், நீரை சுத்திகரிப்பு செய்து கழிவு நீரை கடலுக்குள் விட 7 கி.மீ.,க்கு பாலம் அமைத்து குழாய்கள் அமைக்கப்படவுள்ளது.இதனால் மோர்ப்பண்ணை, திருப்பாலைக்குடி நாட்டுப்படகு மீனவர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளதால் எதிர்ப்பு தெரிவித்து. ஆக., 15 ல் நடந்த கிராம சபை கூட்டத்தை புறக்கணித்ததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து சமாதான கூட்டம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் தற்காலிகமாக பாலம் அமைக்கும் பணிகள் ஆக., 22 வரை நிறுத்தி வைக்கப்பட்டது.நேற்று இரண்டாவது முறையாக சமரச கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் வனத்துறை, மீன் வளத்துறை, மின்வாரிய அதிகாரிகள் மீனவர்களுக்கு விளக்கம் அளித்தனர். கடலில் விடப்படும் நீரின் வெப்பம் மிகக் குறைவாக இருக்கும். இதனால் மீன்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என விளக்கம்அளிக்கப்பட்டது. கலெக்டர் வீரராகவ ராவ் பேசுகையில், இது மின் உற்பத்திக்கான மிகப்பெரிய திட்டம். இதனை நிறுத்த முடியாது. மீனவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் பணிகள் நடைபெறும், என்றார்.இதையடுத்து, கடலில் பாலம் அமைத்தால் பாய்மரப் படகுகள் மீன் பிடிக்க செல்ல முடியாது. கடலில் கலக்கும் கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கும். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். எங்களுக்கு நிவாரணம் தேவையில்லை. திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறி மீனவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X