தக்காளி, மிளகாய் நாற்றுகள் ஒதுக்கீடு... குறை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
00:04

கம்பம் : தேனி மாவட்டத்தில் கடந்தாண்டு எட்டு வட்டாரங்களுக்கும் 64 லட்சம் தக்காளி மற்றும் மிளகாய் நாற்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. ஆனால் இந்தாண்டு 11 லட்சத்து 32 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தோட்டக்க லைத்துறையினர் தவிப்பில் உள்ளனர்.




தேனி தோட்டக்கலை மாவட்டமாகும். இங்கு தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, கடமலை- மயிலை, போடி, சின்னமனுார், உத்தமபாளையம் மற்றும் கம்பம் என எட்டு உதவிஇயக்குனர் அலுவலகங்கள் உள்ளன. தக்காளி மற்றும் மிளகாய் நாற்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க கடந்தாண்டு ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 40 எக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எக்டேக்கு 20 ஆயிரம் நாற்றுகள் தரப்பட்டன. அதன்படி ஒரு வட்டாரத்தில் 8 லட்சம் நாற்றுகள் என மாவட்டத்தில் 64 லட்சம்வழங்கப்பட்டன.




ஆனால் இந்தாண்டு, கடந்தாண்டு அனுமதித்த அளவில் வெறும் 20 சதவீதம் மட்டுமேஅனுமதித்துள்ளனர். அதாவது ஒரு வட்டாரத்திற்கு 7 எக்டேர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஒரு எக்டேருக்கு 20 ஆயிரம் நாற்றுகள் வீதம், 7 எக்டேருக்கு ஒரு லட்சத்து40 ஆயிரம் நாற்றுகள் மட்டுமே வழங்க முடியும். எனினும் மாவட்டம் முழுவதும் 11 லட்சத்து 32 ஆயிரம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.




இந்த குறைவான ஒதுக்கீடு, தோட்டக்கலை அலுவலர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. காரணம் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் சாகுபடிக்காக இலவச நாற்றுகள் கேட்டு வருகின்றனர். இதனை கூடுதலாக வழங்க துறை உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X