| வடக்கு, தெற்கு தாலுகாவில் சிறப்பு குறைதீர் கூட்டம் Dinamalar
வடக்கு, தெற்கு தாலுகாவில் சிறப்பு குறைதீர் கூட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
00:12

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சியின், 60 வார்டுகள் மற்றும் திருப்பூர் ஒன்றியத்தின், 13 ஊராட்சிகளிலும், சிறப்பு குறைகேட்பு முகாம் இம்மாதத்தில் நடக்க உள்ளது.நகரம் மற்றும் கிராமப்புற மக்களின் குறைகளை கேட்டு, விரைந்து நிறைவேற்றி கொடுக்க ஏதுவாக, சிறப்பு குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. தமிழக முதல்வர், சிறப்பு குறைகேட்பு கூட்டத்தை துவக்கி வைத்துள்ளார்.மாநகராட்சியில், 27ம் தேதி, 1, 2, 3, 16, 17, 18, 31, 32, 33, 46, 47, 48வது வார்டுகளில் முகாம் நடக்கிறது. 28ம் தேதி, 4, 5, 6, 19, 20, 21, 34, 35, 36, 49, 50, 51வது வார்டுகள்; 29ம் தேதி, 7, 8, 9, 22, 23, 24, 37, 38, 39, 52, 53, 54வது வார்டுகள்; 30ம் தேதி, 10, 11, 12, 25, 26, 27, 40, 41, 42, 55, 56, 57வது வார்டுகள்; 31ம் தேதி, 13, 14, 15, 28, 29, 30, 43, 44, 45, 58, 59, 60வது வார்டுகளுக்கு, சிறப்பு முகாம் நடக்கிறது.திருப்பூர் தெற்கு தாலுகாதிருப்பூர் தெற்கு தாலுகாவில், 27ம் தேதி துவங்கி, 31 வரை, சிறப்பு குறைகேட்பு முகாம் நடக்கிறது. தாசில்தார் மகேஸ்வரன், வேளாண்மை அலுவலர் சீதா, உதவி தோட்டக்கலை அலுவலர் ராஜபிரபு, துணை பி.டி.ஓ.. சாந்தி ஆகியோர், மனுக்கள் பெறும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.வரும், 27ல் மங்கலம், இடுவாய், முதலிபாளையம் ஊராட்சிகள்; 28ல் நாச்சிபாளையம், பெருந்தொழுவு, உகாயனுார் ஊராட்சிகள்; 29ல், தொங்குட்டிபாளையம், கண்டியன் கோவில், வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சிகள்; 30ம் தேதி, அலகுமலை, தெற்கு அவிநாசிபாளையம் ஊராட்சிகளில் நடக்கிறது.திருப்பூர் வடக்கு தாலுகாதிருப்பூர் வடக்கு தாலுகாவில், தாசில்தார் ஜெயக்குமார், பி.டி.ஓ., கனகராஜ், வேளாண்மை அலுவலர் அருண்குமார், உதவி தோட்டக்கலை அலுவலர் ரமேஷ் ஆகியோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. வரும், 27ம் தேதி பொங்குபாளையம் ஊராட்சியிலும், 28ம்தேதி கணக்கம்பாளையம் ஊராட்சியிலும் சிறப்பு குறைகேட்பு முகாம் நடக்கிறது.மாநகராட்சியில், வார்டு பகுதியிலும், ஊராட்சி பகுதிகளில், ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் முகாம் நடக்கும். பொதுமக்கள், தங்களது கோரிக்கை மனுக்களை, முகாமில் வழங்கலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X